முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பண்ணைப்பயிர் மேலாண்மை திட்டம்

சனிக்கிழமை, 3 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, மார்ச் - 4 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  நேற்று தலைமைச் செயலகத்தில், விவசாயப் பெருமக்கள் பயன்பெறும் வகையில் இந்தியாவிலேயே முதன் முறையாக தகவல் தொழில்நுட்பம் சார்ந்த  பண்ணை பயிர் மேலாண்மை திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் இந்தியாவிலேயே ஒரு முன்னோடி திட்டமாகும். பண்ணை அளவிலான இத்திட்டத்தின் மூலம் பயிர் தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் வேளாண் வணிகம் சார்ந்த அறிவுரைகளையும் விவசாயிகள் எளிதில் பெற இயலும். இந்த வலைதளத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்த விவசாயிகள் எந்த நேரத்திலும்  கைபேசி மூலம் பண்ணை இயந்திரங்களை வாடகைக்கு அமர்த்தலாம்.  மேலும், இதன் மூலம் விவசாயப் பெருமக்கள் உரங்கள், விதைகள் மற்றும் இதர வேளாண் இடுபொருட்கள் இருப்பு விவரங்களையும், வேளாண் துறையின் மூலம்  செயல்படுத்தப்படும் பல்வேறு அரசு நலத்திட்டங்களையும் எளிதில் அறிந்து கொள்ள இயலும்.  பயிர் உற்பத்தி மற்றும் வணிகம் தொடர்பான அனைத்து விளக்கங்களையும்  இந்த புதிய மென்பொருட்கள் மூலம் மாநிலத்தின் எந்த கிராமத்திலிருந்தும் விவசாயிகள் தகவல் பெற முடியும்.  தமிழகத்தில் இரண்டாம் பசுமை புரட்சிக்கு வித்திடும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக முதலமைச்சரால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட இம்முன்னோடி திட்டம் அனைத்து விவசாயப் பெருமக்களும் பண்ணை உற்பத்தியை பெருக்கி, வருவாய் அதிகரிக்க உறுதுணையாக இருக்கும். இந்நிகழ்ச்சியில்,வேளாண்மைத்துறை அமைச்சர் , தலைமைச் செயலாளர், வேளாண்மைத் துறைச் செயலாளர், வேளாண்மை ஆணையர், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்த் துறை ஆணையர் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago