முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பலத்த பாதுகாப்புடன் கோவாவில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

பனாஜி, மார்ச் - 3 - கோவாவில் நேற்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. கடைசியாக கிடைத்த தகவல்படி இம்மாநிலத்தில் மொத்தம் 80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மணிப்பூர், உத்தர பிரதேசம், பஞ்சாப் உத்தரகாண்ட், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தலில் உத்தர பிரதேசத்தில் ஏற்கனவே 6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டன. இதே போல உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்று முடிந்து விட்டன.  நேற்று கோவா மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. .  நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. ஏராளமான ஆண்களும் பெண்களும் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.  இந்த தேர்தலில் 9 பெண்கள், 74 சுயேட்சைகள் உள்பட மொத்தம் 215 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாட்டிலேயே முதல் முறையாக கோவா மாநிலத்தில் நேற்று நடந்த  வாக்குப்பதிவின் போது வாக்காளர்களின் புகைப்படம், விரல் ரேகை ஆகியவை கணிணி மூலம் பதிவு செய்யப்பட்டது. கோவா மாநிலம் முழுவதும்  1612 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு  அவற்றில் 10,644 தேர்தல் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுருந்தனர். இந்த தேர்தல் மிகுந்த பாதுகாப்புடன் நடைபெற தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்திருந்தது. பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசாரும், துணை ராணுவ படையினரும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.  மொத்தம் 3526 போலீசார் இப்பணியில் ஈடுபட்டனர்.  இந்த தேர்தலில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கும் பா.ஜ.க.- எம்.ஜி.பி.கூட்டணிக்கும் இடையேதான் கடுமையான போட்டி நிலவுகிறது. இம்மாநில சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை வருகிற 6 ம் தேதி நடைபெறுகிறது. அன்று நண்பகலுக்குள்ளேயே  இதன் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்