முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாலத்தீவில் கைதான குமரி மீனவர்கள் விடுவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

நாகர்கோவில்,மார்ச் - 4 - குமரி மாவட்டம் இரவிபுத்தன் துறை கிராமத்தைச் சேர்ந்தவர் செரின் ஆன்றோ என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த ராபர்ட் ஆண்டனி, மரியதாசன் ,ஜான்பிரபு, ததேயுஸ், அந்தோணி அடிமை, ஆரோக்கியதாஸ், நிக்கோலஸ், ஜோசப்ஜின், அசிஸ், முள்ளுர் துறையைச் சேர்ந்த பிஸ்மன் ஆகிய 11 மீனவர்கள்  மீன் பிடிக்கச்சென்றனர். அவர்கள் கடலில் எல்லை தாண்டியதாக கூறி மாலத்தீவு கடற்படையினரிடம் சிக்கினர். இது பற்றி தகவல் இங்குள்ள மீனவர்களின் உறவினர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் உடனே மீன் வளத்துறை அதிகாரிகளுக்கும், மத்திய மாநில அரசுகளுக்கும் தகவல் தெரிவித்தனர். இந்த தகவல் கிடைத்ததும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் அதிகாரிகளை தமிழக அரசு தொடர்பு கொண்டது. படகையும் மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தூதரக அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். இந்த முயற்சியின் காரணமாக மீனவர்கள் மீது மாலத்தீவு அரசு வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் அவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து விடுதலையான 11 மீனவர்களும் நேற்று கடல் வழியாக ஊருக்கு திரும்புகிறார்கள். அவர்கள் இன்று காலை சொந்த ஊருக்கு வருவார்கள் இதனை தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் தலைவர் பாதிரியார் சர்ச்சில் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து மத்திய அரசை வலியுறுத்தியதால் 11 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். இதுபோன்ற விவகாரங்களில் எல்லை தாண்டி செல்லும் மீனவர்களை கைது செய்து உடனடியாக வழக்குப்பதிவு செய்து விட்டால் அவர்களை விடுவிப்பதில் தாமதம் ஏற்படும் தற்போது மாலத்தீவில் கைதான மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாததால் அவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டு உள்ளனர். எனவே நமது எல்லையில் மீன் பிடிக்கும் மீனவர்கள் சில நேரங்களில் எல்லை தாண்டிச் செல்லும் போது இது போன்று நடந்து கொண்டால்; மீனவர்கள் விடுதலை செய்வது உடனடியாக நடக்கும். அதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்