முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம்-புதுச்சேரியில் மெட்ரிகுலேஷன் தேர்வுகள் துவங்கின

புதன்கிழமை, 23 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச். 23 -​ தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏறக்குறைய ஒன்றரை லட்சம் மாணவ, மாணவியர் எழுதும் மெட்ரிக்குலேசன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்​2 பொதுத்தேர்வு கடந்த 2​ந்தேதி தொடங்கி 21ந் தேதியுடன் முடிந்தது. இதனைத்தொடர்ந்து 10​ம் வகுப்பு மெட்ரிக்குலேசன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் தேர்வு நேற்று தொடங்கி ஏப்ரல் 11​ந்தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மெட்ரிக் பொதுத் தேர்வினை 3,240 பள்ளிகளில் இருந்து ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 252 மாணவ​மாணவிகள் எழுதுகிறார்கள். 79 ஆயிரத்து 294 மாணவர்களும், 65 ஆயிரத்து 458 மாணவிகளும் தேர்வு எழுதுகிறார்கள்.

சென்னையில் மட்டும் 18 ஆயிரத்து 124 மாணவ​ மாணவிகள் மெட்ரிக் தேர்வு எழுதுகிறார்கள். இதில் 9348 மாணவர்களும், 8776 மாணவிகளும் அடங்குவார் கள். புதுச்சேரியில் 1432 மாணவ ​ மாணவிகள் பரீட்சை எழுதுகிறார்கள். இதே போல ஆங்கிலோ இந்தியன் பாடத் திட்ட பொதுத் தேர்வினை 42 பள்ளியில் இருந்து 4873 மாணவ​மாணவிகள் எழுதுகிறார்கள். 2034 மாணவர்களும், 2839 மாணவிகளும் பரீட்சை எழுதுகின்றனர். சென்னையில் மட்டும் 2302 மாணவ​மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனர்.

நேற்று தமிழ் முதல் நாள் தேர்வு நடந்தது. இன்று (23​ந்தேதி) தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்