முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. தேர்தலில் காங்கிரசுக்கு குறைந்தது 100 இடங்கள் கிடைக்கும்-திக்விஜய்சிங்

ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, மார்ச்.- 5 - உத்திரபிரதேச மாநிலம் சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு குறைந்தபட்சம் 100 இடங்களாவது கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்தலுக்கு பின் கருத்துக்கணிப்புகளின் படி காங்கிரசுக்கு 40 இடங்களுக்கு குறைவாகத் தான் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதனை மறுத்துள்ள திக்விஜய்சிங், எக்ஸிட் போல் என்பவை பெரும்பாலும் தவறாகவே இருக்கும். இந்த முறையும் இது உறுதி செய்யப்படும் என்றார். மேலும் பல கோடி மக்கள் தேர்தலில் வாக்களிக்கின்றனர். அதில் 1000 பேரிடமிருந்து கருத்து கேட்டுவிட்டு இதுதான் தேர்தல் முடிவு என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இது சாத்தியமில்லை. இது எப்படி சரியானதாக இருக்கமுடியும் என்று திக்விஜய் சிங்  கேள்வி எழுப்பினார். எங்களுடைய கணிப்பின்படி உத்திரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு குறைந்தபட்சம் 100 இடங்களாவது கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்