முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சம்பளத்தை மனைவியிடமே தர வேண்டும்: இந்தோனேசிய அரசு

திங்கட்கிழமை, 5 மார்ச் 2012      உலகம்
Image Unavailable

 

ஜகார்தா, மார்ச். - 5 - இந்தோனேசிய நாட்டில் ஆண் ஊழியர்களின் சம்பள பணத்தை அந்நாடு அவரவர் மனைவிகளிடம் ஒப்படைக்கும் படி உத்தரவிட்டுள்ளது. ஆண்கள் தங்களின் சம்பளம் முழுவதும் வேறு வழிகளில் செலவழிப்பதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தோனேசியாவில் அரசு பணி மேற்கொள்ளும் ஊழியர்கள் தங்களது சம்பள பணத்தை கள்ளக் காதலிகள் மற்றும் விபச்சாரிகளிடம் செலவு செய்து வருவதாக தெரிகிறது. இதனால் குடும்பம் நடத்த முடியாமல் சிரமத்திற்குள்ளாவதாக அரசு ஊழியர்களின் மனைவிமார்கள் புகார் தெரிவித்தனர். இந்த புகார்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  இதில் அதிக அரசு ஊழியர்கள் கள்ளத் தொடர்பில் ஈடுபட்டு பணத்தை செலவிடுவதை கண்டறியப்பட்டது. இதையடுத்து அரசு ஊழியர்களின் சம்பள பணத்தை அவரவரது மனைவிமார்களிடம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதை தொடர்ந்து மனைவிமார்களின் பெயர்களில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு அதில் சம்பள பணம் போடப்பட்டது. இந்த நடைமுறை இந்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது. 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்