முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாமக்கல்லில் இன்று லாரி உரிமையாளர் சங்க பொதுக்குழு ஸ்டிரைக் நீடிப்பு பற்றி முக்கிய முடிவு

திங்கட்கிழமை, 5 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, மார்ச்.- 5 - எல்.பி.ஜி. கியாஸ் டாங்க் லாரி ஸ்டிரைக் முத்தரப்பு பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததை ஒட்டி நாமக்கல்லில் இன்று அதன் பொதுக்குழு கூடுகிறது இதில் ஸ்டிரைக் நீடிப்பதா என்பது பற்றி முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. புதிய வாடகை ஒப்பந்தத்தை நிறைவேற்றி வாடகையை உயர்த்தி வழங்க வேண்டும், ஏற்கனவே ஓடும் 3600 டேங்கர் லாரிகள் தவிர புதிதாக 600 லாரிகளையும் கியாஸ் ஏற்றும் ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கடந்த மாதம் 29-​ந் தேதி நள்ளிரவு முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 4​வது நாளாக போராட்டம் nullநீடித்தது. இதனால் 3600 கியாஸ் டேங்கர் லாரிகள் சேலம், சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் நிறுத்தப்பட்டு உள்ளன. சுத்திகரிப்பு நிலை யத்தில் இருந்து பாட்லிங் பிளாண்டுகளுக்கு கியாஸ் லாரிகள் கியாஸ் ஏற்றி வரவில்லை. இதனால் சேலம் கருப்nullர் உள்பட எண்ணை நிறுவன ஆலைகளில் சிலிண் டர்களில் கியாஸ் நிரப்பும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே கியாஸ் பதிவு செய்து புதிய சிலிண்டர் வர 25 நாட்கள் முதல் 40 நாட்கள் வரை ஆகிறது. இந்த ஸ்டிரைக் தொடர்ந்து nullநீடிப்பதால் கியாஸ் தட்டுப்பாடு மேலும் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் இந்த ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு முயற்சி மேற்கொண்டது. இதற்காக முத்தரப்பு பேச்சு வார்த்தை சென்னை எழிலகத்தில் நேற்று நடந்தது. நேற்று பகல் 12 மணி முதல் நள்ளிரவு வரை இந்த பேச்சுவார்த்தை நடந்தது. இதில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசனின் செயல் இயக்குனர். குப்தா, போக்குவரத்துத் துறை இணை செயலாளர் பன்னீர் செல்வம், தென்மண்டல பல்க் எல்.பி.ஜி.டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் பொன்னம்பலம் மற்றும் உணவு வழங்கல் துறை ஆணையர் பஷீர் அகமது உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. இதனால் டேங்கர் லாரி ஸ்டிரைக் தொடர்வதாக தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமை யாளர்கள் அறிவித்து உள்ளனர். இது குறித்து தென்மண்டல கியாஸ் டேங்கர் லாரிகள் சங்க தலைவர் பொன்னம்பலம் கூறியதாவது:​ சென்னையில் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் எண்ணை நிறுவனங்களுக்கு கூடுதலாக 570 லாரிகளை இயக்க அனுமதி தரவேண்டும், லாரி வாடகையை உயர்த்தி தரவேண்டும் என்ற இந்த முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தினோம். ஆனால் இதற்கு முழுமையாக சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் நாமக்கல்லில் இன்று கூடும் பொதுக்குழு கூட்டத்தில் இதுகுறித்து முக்கிய முடிவு கள் எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். மேலும் அவர் கூறும்போது இன்று பொதுக்குழு கூடும் வரை தொடர்ந்து கியாஸ் டேங்கர் லாரி ஸ்டிரைக் nullடிக்கும் என்றார். இதன்படி எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் இன்று காலை11 மணிக்கு நாமக்கல் பரமத்தி ரோட்டில் உள்ள நாமக்கல் தாலுகா லாரி மற்றும் டிரெய்லர் உரிமையாளர்கள் சங்க வெள்ளி விழா கட்டிடத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்துக்கு மாநில லாரி உரிமையாளர்கள் சங்க சம்மேளன தலைவர் நல்லதம்பி முன்னிலை வகிக்கிறார். தென்மண்டல எல்.பி.ஜி. பல்க் கியாஸ் டேங்கர் லாரி உரிமை யாளர்கள் சங்க தலைவர் பொன்னம்பலம் தலைமை தாங்குகிறார்.இந்த கூட்டத்தில் எல்.பி.ஜி. டேங்கர் லாரி டெண்டர் தொடர்பாக முத்தரப்பு பேச்சு வார்த்தையில் கூறிய விவரங்களை சங்க நிர்வாகிகள் உறுப்பினர் களிடம் எடுத்து கூற உள்ளனர். அதன்பிறகுதான் போராட்டம் வாபஸ் பெறப்படுமா? அல்லது nullநீடிக்குமா? என்பது தெரியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்