முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாவட்ட புதிய கலெக்டர் பொறுப்பு ஏற்றார்

புதன்கிழமை, 23 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,மார்ச்.23  - மதுரை மாவட்ட புதிய கலெக்டராக சகாயம் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவரிடம் முன்னாள் கலெக்டர் காமராஜ் பொறுப்புக்களை ஒப்படைத்தார். 

மதுரை மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற கிரானைட் ஊழலுக்கு துணைபோன மதுரை மாவட்ட கலெக்டராக பணியாற்றிய சி.காமராஜ் மீது தமிழக தேர்தல் ஆணையம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையை தொடர்ந்து காமராஜ், ஈரோடு மாவட்டத்திற்கு உடனடியாக மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக மதுரை மாவட்ட புதிய கலெக்டராக சகாயம் நியமிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து புதிய கலெக்டர் சகாயம் நேற்றுக்காலை பொறுப்பேற்றுக்கொண்டார். அவரிடம் முன்னாள் கலெக்டர் காமராஜ் பொறுப்புக்களை ஒப்படைத்தார். 

புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள சகாயம் நாமக்கல் மாவட்ட கலெக்டராக பணியாற்றியவர். இவரது சொந்த ஊர் புதுக்கோட்டை. இதற்கு முன்பு கலெக்டர் சகாயம் திருப்பூரில் உள்ள மேம்பாட்டுக்கழக மேலாண்மை இயக்குனராக பணியாற்றி வந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்