முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணுஉலை ஆபத்தை விளைவிக்கும் ரஷ்ய முன்னாள் அதிபர்கருத்து

திங்கட்கிழமை, 5 மார்ச் 2012      உலகம்
Image Unavailable

 

மாஸ்கோ, மார்ச். - 5 - அணு உலைகளால் ஏற்படும் ஆபத்தை செர்னோபில் அணு உலை விபத்தில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று ரஷ்யாவின் முன்னாள் அதிபர் கோர்பசேவ் தெரிவித்துள்ளார். 1986 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரஷ்யாவின் செர்னோபில்லில் அணு உலை வெடிப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த விபத்தின் போது அதிபராக இருந்தவர் கோர்பசேவ். இது குறித்து கோர்பசேவ் எழுதியுள்ள கட்டுரையில், இந்த விபத்தை சுட்டிக் காட்டியுள்ளார். சர்வதேச அளவில் மக்கள் தொகையானது அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் எரிசக்தியின் தேவையும் அதிகரிக்கிறது. காற்று, சூரிய ஒளி, நீர் போன்ற மரபுசாரா எரிசக்தி துறையில் அதிக முதலீடு செய்ய வேண்டியது அவசியமாகும். அணுசக்தியை பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானதாகும். அணு உலைகள், அணு கழிவு போன்றவற்றின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தினால் ஏற்படும் அழிவு எண்ணிப்பார்க்க முடியாதது. அணு உலைகளினால் ஏற்பட்ட ஆபத்தை செர்னோபில் அணு உலை வெடிப்பில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். செர்னோபில் விபத்தானது முழுவதும் தொழில்நுட்ப கோளாறால் மனித தவறால் ஏற்பட்டது. இந்த விபத்தில் இறந்தோரின் எண்ணிக்கை ஆரம்பத்தில் மிக குறைவாக இருக்கும் என்றுதான் கருதினோம். ஆனால் பின்னர்தான் அது பெரும் விபத்து என்பதை உணர்ந்தோம். இவ்வாறு அதில் கோர்பசேவ் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்