முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்ய அதிபராக புட்டீன் 3-வது முறையாக பதவி ஏற்கிறார்

செவ்வாய்க்கிழமை, 6 மார்ச் 2012      உலகம்
Image Unavailable

மாஸ்கோ,மார்ச்.6 - ரஷ்ய அதிபராக விளாடிமிர் புட்டீன் நாளை 3-வது முறையாக பதவி ஏற்கிறார். ரஷ்யாவின் அதிபராக விளாடிமீர் புட்டீன் ஏற்கனவே இரண்டு முறை பதவி வகித்துள்ளார். ரஷ்ய அரசியல் சட்டப்படி ஒருவர் தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் பதவியில் இருக்க முடியாது. அதனால் ரஷ்யாவில் கடந்த முறை நடந்த அதிபர் தேர்தலில் புட்டீன் போட்டிபோடயிடவில்லை. அதற்கு பதிலாக தம் சொல்லுக்கேட்கும் டிமிட்ரி மெத்வதேவ் என்பவரை அதிபர் தேர்தலில் நிற்க செய்து வெற்றிபெற செய்தார். டிமிட்ரியை அதிபராக்கிவிட்டு பிரதமர் பதவியை புட்டீன் வகித்தார். இந்த முறை நடந்த அதிபர் தேர்தலில் அவரை நிற்க செய்யாமல் மீண்டும் புட்டீன் போட்டியிட்டார். ஐக்கிய ரஷ்ய கட்சி சார்பில் தற்போதையை பிரதமர் விளாடிமிர் புட்டீன் போட்டியிட்டார். கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கென்னடி இகனோவும் அல்ட்ரா தேசியவாத கட்சி சார்பில் விளாடிமீர் சிரினோஷூம் சுயேட்சையாக மிகேயல் புரோக்கரோவும் முன்னாள் சபாநாயகர் செர்ஷிமிரனோவும் போட்டியிட்டனர். அதிபர் தேர்தல் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. அதில் புட்டீனுக்கு 60 சதவீதம் ஓட்டுக்கள் கிடைக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கணித்திருந்த நிலையில் 64 சதவீத வாக்குகளை புட்டீன் பெற்று அமோக வெற்றிபெற்றார். இதனையொட்டி நாளை நடைபெறவிருக்கும் பதவி ஏற்பு விழாவில் புட்டீன் 3-வது முறையாக அதிபர் பதவியை ஏற்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்