முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எகிப்தில் தாகூர் சிலை திறக்கப்பட்டது

செவ்வாய்க்கிழமை, 6 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

கெய்ரோ, மார்ச் 6-இந்திய கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் உருவச் சிலை எகிப்தில் திறக்கப்பட்டது. நோபல் பரிசுபெற்ற இந்திய கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் சிலை கெய்ரோவில் திறந்துவைக்கப்பட்டது. இச்சிலையை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் எகிப்து கலாச்சாரத்துறை அமைச்சர் ஷாகெர் அப்தில் ஹமீதும் திறந்துவைத்தனர். ரவீந்திரநாத் தாகூரின் 150 வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக இந்தச் சிலையை, இந்திய கலாச்சார அமைப்பு மூலம் எகிப்தில் உள்ள எகிப்து கலாசார அமைச்சகத்தின் அலுவலகத்தில் இந்த உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு அளிக்கப்பட்ட கவுரவமாக கருதப்படுகிறது. 1878 மற்றும் 1926 ஆம் ஆண்டுகளில் தாகூர் எகிப்திற்கு சென்றுள்ளார். இவர் எகிப்தின் புகழ்மிக்க கவிஞரான ஷாவியுடன் நட்புக்கொண்டிருந்தார். கடந்த மே மாதம் முதல் தாகூரின் 150 வது  பிறந்த நாள் விழாவை இந்திய தூதரகத்தில் உள்ள கலாசாரப் பிரிவு பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் மிகச் சிறப்பாக கொண்டாடி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony