முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவிவி பெண்கள் கல்லூரி விழாவில் பாரதிராஜா பங்கேற்ப்பு

வியாழக்கிழமை, 8 மார்ச் 2012      சினிமா
Image Unavailable

 

விருதுநகர், மார்ச்.8 - விருதுநகர் விவிவி பெண்கள் கல்லூரி மாணவிகளை பார்த்துதான் தமிழ் கலாச்சாரம் இன்னும் வாழ்கிறது என தெரிந்துகொண்டேன் என கல்லூரி பொன்விழாவில் டைரக்டர் பாரதிராஜா பேசினார். இதுபற்றிய விபரம் வருமாறு., விருதுநகர் விவிவி பெண்கள் கல்லூரி பொன்விழா ஆண்டு 50ம் ஆண்டு கல்லூரி விழா மற்றும் கல்லூரி நிறுவனர் விழா கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி செயலாளர் டி.டி.மதன் தலைமை தாங்கினார். கல்லூரி தலைவர் பிசிகே.முரளிதரன், உபதலைவர் ஜெயப்பிரியா, கூட்டுச்செயலாளர் எம்.இனிமை முன்னிலை வகித்தனர்.

கல்லூரி முதல்வர் டாக்டர் பி.செல்வமீனாட்சி ஆண்டறிக்கையை வாசித்தார். 

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சினிமா டைரக்டர் பாரதிராஜா சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில்

தமிழ்கலாச்சாரம் இன்னும் வாழ்கிறது என இந்த விவிவி பெண்கள் கல்லூரி மாணவிகளை பார்த்துதான் தெரிந்துகொண்டேன். உங்களிடம் தமிழ்கலாச்சாரம் வாழ்கிறது.  இந்த கல்லூரியின் செயலாளர் மிக சிறப்பாக செயல்படுகிறார். மிக சிறப்பாக பேசுகிறார். காரணம் அவர் பேசுகையில் நீங்கள் கொடுத்த ஆதரவிலேயே தெரிகிறது. என்னை இங்கு வந்து பேச அழைத்ததற்கு காரணமாக இருந்த ஆசிரியை அமுதாவிற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஆசிரியை அமுதா மிகவும் திறமை வாய்ந்தவராக உள்ளார். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமை ஒளிந்திருக்கும். நீங்கள் முதலில் உங்கள் அப்பா, அம்மாவை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். அதுதான் உங்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். முதலில் உங்கள் அப்பா, அம்மா, உங்கள் மண், பின்னர் குருவை நேசியுங்கள். வாழ்க்கையை படிக்கும்போதே தெரிந்துகொள்ளுங்கள். படிக்கும் போதே வாழ்க்கையை பற்றி முடிவெடுங்கள். நீங்கள் என்ன ஆக போகிறோம் என்பதை படிக்கும்போதே முடிவெடுங்கள். 2 லட்சம் தமிழர்கள் கொள்ளப்படுவதை நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டுவிட்டோம். இனியும் ஒரு தமிழர் கூட வீழ்வதை நாம் வேடிக்கை பார்க்க கூடாது. தமிழ் உணர்வு நமக்கு வேண்டும் என பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago