முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியா - இலங்கை இறுதிச்சுற்றில் இன்று பலப்பரிட்சை

வியாழக்கிழமை, 8 மார்ச் 2012      விளையாட்டு
Image Unavailable

 

அடிலெய்டு, மார்ச். 7 - முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் போட்டியில் கோப்பையைக் கைப்பற் றுவதற்காக ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் அடிலெய்டு நகரில் இன்று நடக்க இருக்கும் 3 -வது இறுதிச் சுற்றுப் போட்டியில் பலப்பரிட்சை நட த்த உள்ளன. ஆஸ்திரேலியாவில் முத்தரப்பு ஒரு நா ள் கிரிக்கெட் தொடர் போட்டிகள் கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக வெ கு விமர்சையாக நடந்து வருகிறது. 

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா, இலங்கை மற்றும் இந்தியா ஆகிய 3 நாடுகள் களம் இறங்கின. முன்னதாக நடந்த லீக் ஆட்டங்களின் முடிவில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் கூடுதல் புள்ளியைப் பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறின. 

லீக் ஆட்டத்தின் முடிவில் இலங்கை அணி 19 புள்ளியைப் பெற்று முதலிடம் பிடித்தது. ஆஸ்திரேலிய அணி 19 புள்ளி யுடன் 2 -வது இடம்  பெற்றது. இந்திய அணி 15  புள்ளியுடன் 3 -வது இடம் பெ ற்று வெளியேறியது. 

கடந்த 4 -ம் தேதி நடந்த முதல் இறுதிச் சுற்றில் ஆஸ்திரேலிய அணி 15 ரன் வித் தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த் தி இறுதிச் சுற்று தொடரில் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 

பின்பு நடந்த 2 -வது இறுதிச் சுற்றில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாச த்தில் ஆஸ்திரேலிய அணியை தோற்க டித்தது. இதனால் இந்தத் தொடர் 1 - 1 என்ற கணக்கில் சமனாகியது.

இறுதிச் சுற்றைப் பொறுத்தவரை ஆஸ் திரேலியா மற்றும் இலங்கை ஆகிய இர ண்டு அணிகளும் சமபலம் பொருந்திய வையாக உள்ளன. எனவே இந்தத் தொடரில் இரு அணிகளும் மாறி மாறி வெற்றி பெற்று உள்ளன. இதனால் 3 -வது இறுதிச் சுற்றில் ஆட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. 

முன்னதாக நடந்த முதல் இறுதிச் சுற்றி ல் ஆஸ்திரேலிய அணியால் எளிதில் வெற்றி பெற முடியவில்லை. கடும் போராட்டத்திற்குப் பிறகே இலங்கை அணியை தோற்கடித்தது. 

பின்பு நடந்த 2 -வது இறுதிச் சுற்றில் இலங்கை அணியின் கேப்டனான ஜெய வர்த்தனே மற்றும் தில்ஷான் இருவரும் அபாரமான பேட்டிங் திறனை வெளிப் படுத்தி ஆஸி. வீரர்களை திணற வைத்த னர். 

ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் மை க்கேல் கிளார்க், வார்னர், வாட்சன், வாடே, ஹஸ்சே சகோதரர்கள் மற்றும் பாரெஸ்ட் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். 

இலங்கை அணியில் கேப்டன் ஜெயவர் த்தனே, தில்ஷான், சண்டிமால், ஆல்ர வுண்டர் குலசேகரா மற்றும் மேத்யூஸ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். 

ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று அடிலெ ய்டு நகரில் நடக்க இருக்கும் 3 -வது இறுதிச் சுற்றுப் போட்டி இந்திய நேரப் படி காலை 8.30 மணிக்கு துவங்குகிறது. இந்தப் போட்டி ஸ்டார் கிரிக்கெட் சே னல் மற்றும் இ.எஸ்.பி.என். சேனல்களி ல் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்