முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கியாஸ் டேங்கர்லாரி ஸ்டிரைக் வாபஸ்

வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

சென்னை, மார்ச்.9 - சமையல் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் தங்களது வேலை நிறுத்தப் போராட்டத்தை திரும்ப பெற்றுள்ளனர்.  இதனையடுத்து டேங்கர் லாரிகள் இயங்கத் தொடங்கின. தென்மண்டல கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7 நாட்களாக வேலை நிறுத்த போராட்டம் செய்தனர். இதன் காரணமாக எண்ணை சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்லிங் பிளாண்டுகளுக்கு கியாஸ் கொண்டு வரும் பணி பாதிக்கப்பட்டது. இதனால் பிளாண்டுகளில் இருந்த கியாஸ் இருப்பும் தீர்ந்தது. எனவே ஏஜென்சிகளுக்கு கியாஸ் அனுப்பும் பணி தடைப்பட்டதால், வீடுகளுக்கு கியாஸ் சப்ளையும் நிறுத்தப்பட்டது. போராட்டம் காரணமாக சுமார் 70 ஆயிரம் டன் கியாஸ் கொண்டு வரும் பணி பாதிக்கப்பட்டது.   இதையடுத்து நேற்று முன்தினம் 2வது முறையாகவும் சென்னையில் முத்தரப்பு கூட்டம் நடந்தது. இரவு வரை நடந்த கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் திடீரென போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதுகுறித்து தென்மண்டல எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் பொன்னம்பலம் கூறியதாவது: பொதுமக்களின் நலன் கருதி இன்று (நேற்று) முதல் கியாஸ் டேங்கர் லாரி வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டு காலை முதல் டேங்கர் லாரிகள் இயக்கப்படுகிறது. நாங்கள் வாடகை கிலோ மீட்டருக்கு ரூ. 2.80 கேட்டோம். ஆனால் எண்ணை நிறுவனத்தினர் ரூ. 2.50 வரை தர சம்மதித்து உள்ளனர். மேலும் ரூ 2.80 தருவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. வண்டிகளை ஓட்டுங்கள் பிரச்சினைகளை பேசி தீர்த்து கொள்ளலாம் என்று கேட்டு கொண்டதால் சென்னையில் நேற்று காலை முதல் கியாஸ் டேங்கர் லாரிகள் வழக்கம் போல் ஓடத்தொடங்கியது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்