முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டுக்கு கூடுதல் மின்சாரம் தேவை: முதல்வர் கடிதம்

வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2012      அரசியல்
Image Unavailable

சென்னை, மார்ச்.10 - தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையை சமாளிப்பதற்கு வெளி மாநிலங்களிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் தமிழகம் வாங்கியுள்ள மின்சாரத்தை கிடைக்கச் செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.தற்போது தமிழகத்தில் மிகக் கடுமையான மின் பற்றாக்குறை நிலவி வருகிறது. எனவே, தாங்கள் இந்த பிரச்சினையில் கவனம் செலுத்தி மத்திய அரசின் மின் தொகுப்பில் இருந்து ஏற்கனவே தாம் நேரில் கேட்டுக் கொண்டபடி ஓராண்டு காலத்திற்கு ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை கூடுதலாக தமிழகத்திற்கு வழங்கவும் வேண்டும் என்றும் பிரதமரிடம் மீண்டும் முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது. தமிழகம் கடுமையான மின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு இருப்பதை nullநீங்கள் அறிவீர்கள். பொதுத்துறை நிறுவனங்களான பாரத கனரக மின் நிறுவனம், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் மற்றும் தேசிய அணுமின் கழகங்கள் மேற்கொண்டு வரும் புதிய மின்சார திட்டங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த பற்றாக்குறையை சமாளிப்பதற்கு தமிழ்நாடு வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை வாங்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கணிசமான அளவுக்கு மின்சாரத்தை வாங்கும் முயற்சிகளில் தமிழகம் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் அவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி மின்சாரத்தை தமிழகத்துக்கு கொண்டு வர இயலவில்லை. இதற்கு காரணம் போதிய மின் பாதை வசதி இல்லாததுதான்.  உதாரணத்திற்கு, குஜராத் மாநிலத்தில் 500 மெகாவாட் மின்சாரத்தை வாங்குவதற்கு தமிழகம் ஒப்பந்தம் செய்துள்ளது.  ஆனால் 203 மெகா வாட் மின்சாரம் மட்டுமே தமிழகத்திற்கு கிடைக்கிறது.  தேசிய அனல்மின் கழகத்திற்கு சொந்தமாக உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள தாத்ரி மின் நிலையத்திலிருந்து 727 மெகாவாட் மின்சாரத்தை இரவு நேரத்தில் பெறுவதற்கு ஒப்பந்தம் செய்த போதிலும் அதை கொண்டு வருவதில் தடை ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழகத்திற்கு வெளியே இருந்து 1750 மெகாவாட் மின்சாரத்தை பெறுவதற்கு தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.  ஆனால் 350 மெகாவாட் மின்சாரம் அளவுக்குத்தான் கொண்டு வரும் நிலை உள்ளது. போதிய மின் பாதை வசதி இல்லாததே இதற்கு காரணம். இதனால் தமிழகத்தில் மின் பற்றாக்குறை சொல்ல இயலாத கவலையை ஏற்படுத்தி உள்ளது.  மின்சாரத்தை கொண்டு வருவதில் உள்ள இடர்பாடுகள் காரணமாக தமிழகத்தில் மின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.   மத்திய அரசு அதிகாரிகளுக்கு இது குறித்து பலமுறை எடுத்துரைத்த போதிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வில்லை.

பிற மாநிலங்களில் இருந்து மின்சாரம் பெற வேண்டும் என்றாலும், அது மத்திய மின் தொகுப்பு மூலம்தான் பெற முடியும். மத்திய அரசு மத்திய மின் தொகுப்பில் இருந்து மின்சாரத்தைத் தர தடையாக இருப்பதால், மற்ற மாநிலங்களில் இருந்தும் தமிழகம் மின்சாரம் பெற முடியவில்லை.

இதுபோல்தான், மாநிலத்தின் மிக முக்கியத் தேவைகள் எதிலும் மத்திய அரசு உதவாமல் பாரா முகமாக இருக்கிறது. எனவே தமிழகத்துக்கு 1000 மெகா வாட் மின்சாரம் மத்திய தொகுப்பு வழியாகக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்... எனவே தாங்கள் தலையிட்டு ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு கொண்டு செல்லும் வகையில் மின் பாதை வசதியை   செய்து தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி நான் தங்களை நேரில் சந்தித்த போது மனு ஒன்றை அளித்தேன். மத்திய அரசு மேற்கொண்டு வரும் மின் திட்டங்கள் முடிவடையும் வரை ஒரு ஆண்டு காலத்திற்கு ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்துக்கு கூடுதலாக வழங்க வேண்டும் என்று தங்களிடம் வலியுறுத்தி இருந்தேன்.

ஆனால் இதுவரை 100 மெகாவாட் மின்சாரம் தான் கூடுதலாக ஒதுக்கப் பட்டுள்ளது. ஆனால் இப்பிரச்சினையில் பலமுறை தமிழக அரசு வேண்டுகோள் விடுத்தும், கடுமையான மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது,  மத்திய அரசின் அலட்சிய தன்மையையே காட்டுகிறது.

இதுபோல்தான், மாநிலத்தின் மிக முக்கியத் தேவைகள் எதிலும் மத்திய அரசு உதவாமல் பாரா முகமாக இருக்கிறது. எனவே தமிழகத்துக்கு 1000 மெகா வாட் மின்சாரம் மத்திய தொகுப்பு வழியாகக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்... ஏற்கனவே கேட்டுக்கொண்டபடி மத்திய தொகுப்பிலிருந்து கூடுதலாக ஆயிரம் மெகாவாட் மின்சாரமும் தமிழகத்துக்கு கிடைக்க செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். மத்திய அரசுக்கு என்னுடைய நல்லெண்ணமும், ஒத்துழைப்பும் தொடரும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பதில் காட்டும் ஆர்வத்தை மாநிலங்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலும் காட்டலாம். எனவே, பிரதமர் இப்பிரச்சனையில் தலையிட்டு தமிழக மின் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்கு வெளி மாநிலங்களில் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தப்படி மின்சாரம் பெறுவதற்கு மின் பாதை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று மீண்டும் உங்களை கேட்டுக் கொள்கிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்