முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோசடி வழக்கிலிருந்து ராவணன் விடுவிக்க தடை

சனிக்கிழமை, 10 மார்ச் 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை.மார்ச்.10 - மோசடி வழக்கில் இருந்து ராவணன் விடுவிக்கப்பட்டதற்கான மாஜிஸ்திரேட் உத்தரவை ஐகோர்ட்நேற்று ரத்து செய்தது.  ராவணன் மீது ரூ.2 கோடி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 28ம் தேதியுடன் அவரது நீதிமன்ற காவல் முடிந்தது. அன்றைய தினம் சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலை நீட்டித்திருக்க வேண்டும். ஆனால் அன்றைய தினம் ஆஜர்படுத்தாமல் அதற்கு மறுநாள் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். இதை சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் ஏற்க மறுத்து, ராவணனை ரூ.2 கோடி மோசடி வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நீதிபதி பி.எஸ்.கர்ணன் நேற்று விசாரித்தார். போலீஸ் சார்பாக பப்ளிக் பிராசிகியூட்டர் சுப்பிரமணியம், கூடுதல் பப்ளிக் பிராசிகியூட்டர் கோவிந்தராஜ் ஆஜராகி, ராவணன் மீது பல வழக்குகள் உள்ளன. பல நீதிமன்றங்களுக்கு அவரை அழைத்துச் செல்ல வேண்டியதிருக்கிறது. இதனால் ரூ.2 கோடி மோசடி வழக்கில் அவரை உரிய நேரத்தில் கோர்ட்டில் ஆஜர்படுத்த முடியவில்லை. இந்த விளக்கத்தை சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் ஏற்றுக் கொள்ளவில்லை. மாஜிஸ்திரேட் உத்தரவை ரத்து செய்து, ராவணன் காவலை நீட்டிக்க உத்தரவிட வேண்டும் என்றார். இதை நீதிபதி ஏற்றுக் கொண்டு, ராவணனை விடுவித்த உத்தரவுக்கு தடை விதித்தார். ராவணன் தரப்பில் 2 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்