முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து டிராவிட் ஓய்வு

சனிக்கிழமை, 10 மார்ச் 2012      விளையாட்டு
Image Unavailable

 

பெங்களூர், மார்ச். 10 - இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீர ரும், முன்னாள் கேப்டனுமான ராகுல் டிராவிட் சர்வதேச கிரிக்கெட் போட்டி யில் இருந்து நேற்று ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ராகுல் டிராவிட். 39 வயதான இவர் இந்திய அணியின் தூண் என்று வர்ணிக்கப்பட்டவர். 

பெங்களூர் வீரரான டிராவிட் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார். சமீ பத்தில் நடந்த ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் டெஸ்ட் போட்டியில் ஏற் பட்ட மோசமான தோல்வி காரணமா க சீனியர் வீரர்களான டிராவிட் மற்றும் லக்ஷ்மண் ஆகியோர் கடும் விமர்சனத்தி ற்கு உள்ளானார்கள். 

இதனால் ஏற்பட்ட நெருக்கடி காரண மாக டிராவிட் டெஸ்ட் உட்பட அனைத்து போட்டியில் இருந்தும் ஒய்வு பெறு வதாக பெங்களூரில் நேற்று நிருபர்களி டம் அறிவித்தார். 

இந்த ஓய்வு முடிவு குறித்து அவர் நிருப ர்களிடம் கூறியதாவது - நான் இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடிய காலம் மிகவும் இனிமையானது. 

தற்போது புதிய தலைமுறையினரும் சாதனை படைக்க வேண்டும். அதற் காக வழிவிட்டு நான் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகுகிறேன். 

எனக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர்க ள், ஊக்கமளித்த சகவீரர்கள், அனைவரு க்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். ஓய்வு பெறுவதில் வருத்தம் இருக்கிறது. இருந்தாலும் பெருமையுடன் ஓய்வு பெ றுகிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

கடந்த 1996 -ம் ஆண்டு சர்வதேசபோட்டிகளில் அறிமுகமான டிராவிட் இதுவ ரை 164 டெஸ்டில் விளையாடி, 13,288 ரன் எடுத்துள்ளார். இதில் 36 சதமும், 63 அரை சதமும் அடித்து இருக்கிறார். அதி கபட்ச ரன் 270 ஆகும். சராசரி 52.31.  

டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக அதி க ரன் குவித்த இந்திய வீரர்களில் டிரா விட் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். 2006 -ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி நடந்த போது, இந்திய அணியின் கேப்டனாக இருந்தார்.

இந்த உலகக் கோப்பை போட்டியின் போது, முதல் சுற்றிலேயே இந்திய அணி தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது. இதனால் டிராவிட் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். 

இந்தியா பல டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற டிராவிட் காரணமாக இருந்துள்ளார். இந்திய கிரிக்கெட்டில் டிரா விட் ஒரு சகாப்தம். 

இளம் வீரர்களுக்கு டிராவிட் முன் உதா ரணமாக திகழ்கிறார் என்றும் கிரிக்கெ ட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்றது பெரிய இழப்பு என்று கிரிக்கெட் நிபுண ர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்