முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமணம் நிச்சயக்கப்பட்ட தம்பி வெட்டி கொலை

சனிக்கிழமை, 10 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

வேதாரண்யம் மார்ச் 10 - வேதாரண்யம் அருகே திருமணம் நிச்சயக்கப்பட்ட தம்பியை சரமாரியாக வெட்டி கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர். இது பற்றிய விபரம் வருமாறு: வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம் சத்திரத்தடி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் விவசாயி. இவரது மகன்கள் பாலசுப்பிரமணியன் (36) பாண்டியன் (30). இதில் பாலசுப்பிரமணியனுக்கு திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். 

இந்த நிலையில் கடந்த மாதம் பாலசுப்பிரமணியனுக்கு திருவிடைமருதூரை சேர்ந்த பெண்ணை நிச்சயம் செய்திருந்தனர். வரும் 30.03.2012 அன்று திருமணம் செய்வதாக தேதி முடிவு செய்து திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது. இதற்கிடையில் பெண் வீட்டார் நேற்று முன்தினம் மதியம் கரியாப்பட்டினத்திற்கு வந்துள்ளனர். அவர்களிடம் பாலசுப்பிரமணியன் திருமணத்திற்கு செலவு செய்வது தொடர்பாக பேசியுள்ளார். இதில் இவர்களிடையே தகராறு ஏற்பட்டது. 

பின்னர் மாலையில் பெண் வீட்டாரை சமாதானம் செய்து பாண்டியன் அனுப்பி வைத்துள்ளார். மேலும், தம்பியின் திருமணத்திற்கு பொது சொத்தை விற்பனை செய்வதற்கு பாலசுப்பிரமணியன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்து நேற்று முன்தினம் நள்ளிரவு பாலசுப்பிரமணியன் கத்தியால் சரமாரியாக பாண்டியனை வெட்டினார். 

ரத்த வெள்ளத்தில் மிதந்த பாண்டியன் உடனடியாக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் இறந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு நடேசன் மற்றும் போலீசர் வழக்கு பதிவு செய்து பாலசுப்பிரமணியனை கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் வேதாரண்யம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!