முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாதல் நிகழ்ச்சிக்கு தம்பிதுரை - மைத்ரேயன் பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 11 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

சென்னை,மார்ச்.11 - பஞ்சாப் மாநில முதல்வராக மீண்டும் பதவிஏற்க உள்ள பிரகாஷ் சிங் பாதலின் பதவி ஏற்பு விழாவில் முதல்வரின் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் மு.தம்பிதுரையும், டாக்டர் வா.மைத்ரேயனும் பங்கேற்பர் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் சிரோன்மணி அகாலிதள் -பா.ஜ.க கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அந்த கூட்டணியின் சார்பில் அகாலி தளத் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் வரும் 14 -ம் தேதி முதல்வராக பதவி ஏற்பு உள்ளார். பதவி ஏற்க விழாவில் பங்கேற்க முதல்வர் ஜெயலலிதாவை தொலைபேசியில் அவர் கேட்டுக்கொண்டார். 

இது தொடர்பாக அதிமுக தலைமைக்கழகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

அண்மையில் நடந்து முடிந்த பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலில் சிரோன்மணி அகாலிதள்  பாரதிய ஜனதா கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றதையடுத்து, பிரகாஷ் சிங் பாதல் அம்மாநில முதலமைச்சராக மீண்டும் பொறுப்பேற்க இருக்கிறார்.    பிரகாஷ் சிங் பாதல்  முதலமைச்சர் ஜெயலலிதாவை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு, 14 -ந் தேதியன்று நடைபெறவுள்ள தனது பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்துமாறு கேட்டுக் கொண்டார்.   பிரகாஷ் சிங் பாதல்  பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று தான் பெரிதும் விழைந்தாலும், 18 -ந் தேதியன்று நடைபெற இருக்கும் சங்கரன்கோயில் இடைத்தேர்தலை முன்னிட்டு 14 -ந் தேதியன்று தான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாகவும், இந்தத் தேர்தல் பிரச்சார நாள் முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பு ஏற்கெனவே வெளியிடப்பட்டு விட்டதாலும், தன்னால் நேரில் கலந்து கொள்ள இயலவில்லை என்பதைத் தெரிவித்த முதலமைச்சர் ஜெயலலிதா, தன் சார்பிலும், அ.தி.மு.க. சார்பிலும், டாக்டர் மு.தம்பிதுரை, எம்.பி., மற்றும் டாக்டர் வா.மைத்ரேயன், எம்.பி., ஆகியோரை பதவியேற்பு நிகழ்ச்சிக்கு அனுப்பி வைப்பதாகத் தெரிவித்தார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பு கூறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்