முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. ஆட்சியில் மின்சாரம் வாங்கியதில் ஊழல்

ஞாயிற்றுக்கிழமை, 11 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

நெல்லை மார்ச்-11- தி.மு.க. ஆட்சியில் மின்சாரம் வாங்கியதில் பெருமளவு ஊழல் நடந்துள்ளதாகம், கடந்த ஆட்சியில் நடந்த நிர்வாக சீர்கேடுதான் தற்போது தமிழகத்தில் நிலவு வரும் மின் தட்டுப்பாட்டிற்கு காரணம் என்று இந்திய குடியரசு கட்சியின் தமிழக தலைவர் செ.கு.தமிழரசன் குற்றஞ்சாட்டியுள்ளார். நேற்று நெல்லையில் செய்தியாளர்களுக்களித்த பேட்டியில் மேலும் அவர் தெரிவித்ததாவது: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து எங்கள் கட்சியின் சார்பில் நானும், கட்சி நிர்வாகிகளும் பிரசாரம் செய்து வருகின்றோம். இத்தேர்தலில் அ.தி.மு.க. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும். கடந்த 9 மாத கால ஆட்சியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலித் மக்களின் வளர்சிக்கு பல்வேறு திட்டங்களை தீட்டி 

செயல்படுத்தி வருகிறார். தலித் மக்களின் நம்பிக்கைக்குரியவராக தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளார். சங்கரன்கேவில் தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டை. எனவே மீண்டும் அங்கு அ.தி.மு.க. அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும். தி.மு.க. வேட்பாளர் குடும்பத்தினரால் குற்றச்சாட்டுக்குள்ளானவர். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனக்கு கிடைத்த எதிர்கட்சி தலைவருக்கான மரபையும், மான்பையும் காப்பாற்ற தெரியாதவர். திரைப்பட காட்சிகளில் வரும் குழாயடி சண்டை காட்சிகளில் நடிப்பது போல் சட்டமன்றத்திலும் செயல்படுகிறார். அவரது கட்சிக்கு நோக்கம், கொள்கை, திட்டங்கள் எதுவுமில்லை.  தமிழகத்தில் தற்போதது நிலவி வரும் மின் தட்டுபாட்டிற்கு கடந்த முறை ஆட்சியில் இருந்த தி.மு.க. வின் நிர்வாக சீர்கேடுகள்தான் காரணம். கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் உபரியாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதை யாரும் மறுக்க முடியாது. கடந்த ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டால் 40 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது. மின்தட்டுப்பாட்டை போக்க தமிழக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். எனவே சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் எதிர்கட்சிகள் மின்வெட்டை காரணம் காட்டி மக்களை ஏமாற்ற முடியாது என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்