முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிமுக வெற்றிக்காக சிங்கப்பூர் தொழிலதிபர்கள் வேண்டுதல்

திங்கட்கிழமை, 12 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

சங்கரன்கோவில்.மார்ச்.13 - சங்கரன்கோவில் இடைத்தேர்தல் களம் உச்சகட்டத்தை நெருங்கி விட்டது. தேர்தல் திருவிழா வரும் 16ம் தேதி மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. இன்னும் 3 நாட்களே உள்ளதால் தலைவர்களும் தொண்டர்களும் அதி தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணி நிமித்தம் வெளியூரில் இருப்பவர்கள் அனைவருக்கும் சனிக்கிழமை காலையே ஊருக்கு வந்து விடுமாறு கட்சியினர் அன்பாக வேண்டுகோள் விடுத்த வண்ணம் உள்ளனர். நேற்று காலை சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணர் திருக்கோவிலுக்கு சிங்கப்பூரை சேர்ந்த தொழிலதிபர்கள் ஆன்டரியோ பிரிட்ஜஸ், ஜான் ஆங் ஆகிய இருவரும் வந்தனர். இவர்கள் சிங்கப்பூரில் பெரிய கட்டுமான கம்பெனி மற்றும் கட்டமைப்பை உடையவர்கள் ஆவார்கள். இதில் ஆன்ட்ரியோ சங்கரநாராயண சுவாமி கோவிலில் அனைத்து சன்னதிகளிலும் சென்று நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்துசெல்வி பல ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறவேண்டும் என வேண்டுதல் செய்தார். மேலும் அவர் தற்போது தமிழ்நாட்டில் தங்கள் கம்பெனிக்கு தொழில் வாய்ப்புகள் எப்படி உள்ளது என்றும் புதிய தொழில் தொடங்குவது குறித்து ஆலோசனை செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.  இந்த நிகழ்ச்சிகளில் முதுகுளத்துார் எம்எல்ஏ முருகன், திருமயம் எம்எல்ஏ வைரமுத்து, சுப்பிரமணியன், ராமலிங்கம், சங்கரன்கோவில் நகர பேரவை தலைவர் அப்துல்கனி, தொழிலதிபர் பழனித்துரை உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago