முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை காலிறுதி ஆட்டம் - பாகிஸ்தான் வெற்றி

புதன்கிழமை, 23 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

மிர்பூர், மார்ச். 24 - உலகக் கோப்பை காலிறுதிச் சுற்றில் மிர்பூரில் நடந்த முதல் ஆட்டத் தில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரை இறுதிக்குள் நுழைந்தது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி தரப்பில் துவக்க வீரர்களாக இறங்கிய கீப்பர் கம்ரான அக்மல் மற்றும் மொகமது ஹபீஸ் இருவரு ம் அபாரமாக ஆடி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். முன்னதாக பெளலிங்கின் போது, பாக். சிறப்பாக பந்து வீசி மே.இ.தீவு அணியின் ரன் குவிப்பை கட்டுபடுத்தியது. அந்த அணி சார்பில், கேப்டன் சாகித் அப்ரிடி மற்றும் சயீத் அஜ்மல் இருவரும்  சிறப்பாக பந்து வீசினர்.  

உலகக் கோப்பை காலிறுதிச் சுற்றில் பாகிஸ்தான் அணி மற்றும் மே ற்கு இந்தியத் தீவுகள் அணிகள் மோதின. இந்தப் போட்டி மிர்பூரில் உள்ள ஷெரே பங்களா சர்வதேச மைதானத்தில் நடந்தது. 

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி தரப்பில், கம்ரான் அக்மல் மற்றும் மொகமது ஹபீஸ் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். இறுதியி ல் அந்த அணி 43.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 112 ரன் னில் சுருண்டது. மே.இ. தீவு அணி சார்பில் 2 வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்க எண்ணைத் தொட்டனர். மற்ற வீரர்கள் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்தனர். 

மே.இ.தீவு அணி சார்பில், சந்தர்பால் அதிகபட்சமாக 106 பந்தில் 44 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 1 பவுண்டரி அடக்கம். தவிர, சர்வான் 68 பந்தில் 24 ரன்னையும், ரோச் 16 ரன்னையும் எடுத்தனர். 

பின்பு 113 ரன்னை எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பாக். அணி ஆடியது. இறுதியில் அந்த அணி 20.5 ஓவரில் 113 ரன்னை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரை இறுதிக்குள் நுழைந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்