முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். நுழைவு தேர்வு எழுத பயிற்சி

திங்கட்கிழமை, 12 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.13 - சென்னை மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவர்கள் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையிலும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.டி.ஐ. குரூப்-1 தேர்வுகளில் தேர்ச்சி பெறும் வகையில் பாடத்திட்டங்கள் உருவாக்கப்படும் என்றும், மாநகராட்சி பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் நேர்த்தியாக பேச ஆரம்ப பள்ளியிலேயே பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் புரட்சிகரமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றி பட்ஜெட்டில் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:-

தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் மொத்தம் 284 இயங்கி வருகின்றன.  இவற்றில் பயின்றுவரும் பெரும்பான்மையான மாணவர்கள் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்தம் வாழ்வில் ஒளி விளக்கினை ஏற்றி அவர்தம் பெற்றோரின் வயிற்றில் பாலை வார்த்திடும் நோக்கோடு 2012 -​2013 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தப்படவுள்ளன.

பள்ளிகள் தோறும் வளர்ச்சிப் பணித்திட்டம்.

குறிப்பு: சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள், 122 தொடக்கப் பள்ளிகள் என 284 பள்ளிகள் இயங்கி வருகின்றன.  இதுவரை ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படும் பள்ளி வளர்ச்சி திட்டங்கள் மூலம் பள்ளிகளின் குறைந்த பட்சத் தேவைகள் மற்றும் அவசரத் தேவைகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டு வந்தன.  இதனால் காலத்திற்கு உகந்த ஆக்கப்nullர்வமான பார்வையை,  பள்ளிக்குத் தேவையான குறிப்பிட்ட வளர்ச்சியை ஏற்படுத்த முடியாமல் போய்விட்டது.  ஒவ்வொரு குழந்தையின் அனைத்து ஆற்றல்களையும் வெளிக்கொணர்ந்திடும் வகையில் பள்ளியின் பார்வையும், அணுகுமுறையும் அமைவது அவசியமாகிறது.

சென்னை மாநகராட்சியின் தொடக்கப் பள்ளிகளில் தொடங்கி மேனிலைப் பள்ளிகள் வரையிலான அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி தோறும் வளர்ச்சித் திட்டம் ஏற்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும். ஆரம்பநிலையில் பள்ளி அளவில் தொடர்ந்து              5 ஆண்டுகளுக்கு பள்ளி தோறும் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு பின்னர் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஒருங்கிணைந்த கவனிப்பு மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தினைச் செயல்படுத்திட ஏதுவாக அனைத்துப் பள்ளிகளுக்கும் உரிய பயிற்சிகள் வழங்கப்படும்.

சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் வருங்காலத்தில் மைய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இந்திய ஆட்சிப் பணித் தேர்வு (ஐ.ஏ.எஸ்.மற்றும் ஐ.பி.எஸ்.), மற்றும் அகில இந்திய பொறியியல், மருத்துவம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குடிமைப் பணியியல் (குரூப்-1) பணிகளுக்கான தேர்வு மற்றும் அகில இந்திய / மாநில அளவிலான நுழைவுத் தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகளை ஆர்வத்துடன் எழுதிடும் வகையில் அதற்கான அடிப்படைப் பாடப்பிரிவு தொடங்கப்பட உள்ளது.

மாணவர்கள் பள்ளியில் பயிலும் காலங்களிலேயே வருங்காலத்தில் பயில வேண்டிய பாடம் பற்றியும், பெற விரும்பும் வேலை வாய்ப்புப் பற்றியும் விவரிக்கக் கூடிய வழிகாட்டுக் கல்வியையும் அதற்கான சிந்தனைகளையும் பெற வேண்டியுள்ளது. அத்தகைய அறிவுதான் அவர்கள் பல்வேறு வகையான நுழைவுத் தேர்வுகளை எழுதிடவும் (அகில இந்திய பொறியியல், மருத்துவம், ஐ.ஐ.கூ. போன்றன) மற்றும் மைய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இந்திய ஆட்சிப் பணி தேர்வு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குடிமைப் பணியியல்               (ழுசடிரயீ​1) பணிகளுக்கான தேர்வு மற்றும் அகில இந்திய / மாநில அளவிலான போட்டித் தேர்வுகள் எழுதிடவும் அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதலையும், சரியான பரிந்துரையையும் அளிக்கும்.

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் நுழைவுத் தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான தயாரிப்புகள், அணுகுமுறைகள் ஆகியவற்றை நன்கு அறிந்திட அவர்களுக்கு சிறப்பு அடிப்படை பாடப்பிரிவுகள் தொடங்கப்படும்.  நுழைவுத் தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகள் எழுத ஆர்வமுடைய மாணவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக அமையும்.

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டு மையம் அமைத்தல்.

குறிப்பு: 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டல் என்பது மிகவும் அவசியமாகும்.  இதனால் காலத்திற்கு உகந்த கல்வி, வேலை வாய்ப்புகளை அறிந்து மாணவர்கள் படிக்க இயலும்.

அறிவிப்பு: அனைத்து உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டு மையம் உருவாக்கப்படும்.  அதற்குப் பயன்படும் வகையில் நாளிதழ்கள், வார பத்திரிக்கைகள், குறிப்புதவி நூல்கள் மற்றும் என்னென்ன படிப்பு, படிப்பிற்கு ஏற்ப வங்கி மூலம் எவ்வளவு கடன் பெறலாம் என்பது குறித்தான குறிப்புதவி நூல்கள் போதுமான அளவில் வழங்கப்படும். ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி.

குறிப்பு: மாணவர்கள் ஆங்கிலத்தில் நேர்த்தியாகப் பேசிடவும் பிறர் பேசுவதைச் சரியாகப் புரிந்து கொள்ளவும் அவர்களுக்குப் போதுமான பயிற்சி தேவைப்படுகிறது.  மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் திறமையைப் பெற்றால் அவர்கள் தன்னம்பிக்கை வளர்வதுடன் வேலை வாய்ப்பினை பெற ஏதுவாகும்.

அறிவிப்பு: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 6, 7, 8 வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசவும் உரையாடவும் ஆங்கிலத்தில் பேசிப்பழகும் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும். 9, 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் தொடங்குவதற்கு முன்னதாக ஆங்கில சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!