முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக ரெட் நோட்டீஸ்

திங்கட்கிழமை, 12 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.13 - சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் புகழேந்தி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:​   கொலை வழக்கில் சென்னை கோர்ட்டால் தேடப்படும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளேன். இந்த வழக்கில் இந்திய வெளியுறவு துறை அளித்துள்ள பதில் மனுவில் மந்திரியாக உள்ள டக்ளஸ் தேவானந்தா அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு வருகை தரும்போது கைது செய்யமுடியாது என்றும் இது இருநாடுகளுக்கு இடையேயான தூதரக உறவை பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.   

இந்தியாவில் ஒருவர் குற்றத்தில் ஈடுபட்டு இருந்தால் அவர் இந்திய குடிமகனாகவோ அல்லது வெளிநாட்டவராக இருந்தாலும் தலைமறைவாக இருக்கும் அவரை சம்பந்தப்பட்ட போலீசார் சி.பி.ஐ. போலீசை அணுகி சர்வதேச போலீஸ் துணையுடன் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக ரெட் நோட்டீசு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் டக்ளஸ் 17 ஆண்டு தலைமறைவு குற்றவாளியாக இலங்கையில் இருந்து வருகிறார். அவருக்கு எதிராக ரெட் நோட்டீசு கொடுக்க சி.பி.ஐ. துணையுடன் சர்வதேச போலீசாரை தமிழக போலீசார் அணுகி இருக்க வேண்டியது கடமையாகும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. எனவே டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக ரெட் நோட்டீசு கொடுக்க நடவடிக்கை எடுக்கும்படியும் தமிழக உள்துறை செயலாளர் போலீஸ் டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் அவர் கூறியுள்ளார். இந்த மனுமீதான விசாரணை விரைவில் நடக்க இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்