முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொறியியல் பட்டதாரிகளுக்கு இணையதளம் மூலம் பயிற்சி

திங்கட்கிழமை, 12 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.13 - தமிழ்நாட்டில் பொறியியல் படித்து முடித்த மாணவர்கள் பத்து சதவீதத்தினர்கள் வேலைவாய்ப்பை பெறும் சூழ்நிலையில் உள்ளார்கள். இத்தகைய குறையைப் போக்கி அனைவருக்கும் வேலைவாய்ப்பைத் தேடித்தர சென்னை கிண்டியில் உள்ள மத்திய அரசின் குறு சிறு நடுத்தர தொழில் முனைவேர் நிறுவனமும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஸ்ரீகாந்தைத் தலைவராகக் கொண்டுள்ள சன்ஆன்லைன் இந்திய பிரைவேட் நிறுவனமும் இணைந்து தமிழ்நாட்டிலுள்ள பொறியியல் மாணவர்களை வேலைக்குத் தகுதியுள்ளோர்களாக ஆக்கும் பயிற்சியை இணையதளம் வழியாக வழங்க உள்ளது என்று சென்னை கிண்டியில் உள்ள குறு. சிறு, நடுத்தர தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் எஸ்.சிவஞானம் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில் பொறியியல் பயின்ற மாணவர்கள் தொழில் தொடங்குவதற்கும் வேலையில் திறமையுடன் செயல்படுவதற்கும் கணினி வழியாக தரப்படும் பயிற்சிக்கு குறைந்த அளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்றார்.

 

இதன் மூலம் மாணவர்கள் தங்களின் வசதிக்கேற்றாற்போல் எந்த நேரத்திலும் படிக்கமுடியும். இந்த பயிற்சிக்கான பாடமுறை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி முதல்வர்கள் மூலம் பெறமுடியும் என்றார். இது மட்டுமல்லாமல் ஏற்கனவே வேலையில் உள்ளவர்கள் தங்களின் திறனை வளர்த்துக் கொள்ள திறன் மேம்பாட்டு பயிற்சியையும் கணினி வழியாக வழங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது கட்டிட வேலை, உற்பத்தித்துறை, சேவைத்துறை போன்றவற்றில் வேலைவாய்ப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நம்மிடம் படித்த இளைஞர்கள் அதிகமாக இருந்தும் இந்தத் துறைகளில இவர்களுக்கு வேலைவாய்ப்பை நம்மால் அளிக்க முடிவதில்லை. இதற்குக் காரணம் இவர்களுக்கு இந்தத் துறையின் கீழ் போதுமான பயிற்சி இல்லாததுதான். படிக்கின்றபோதே இத்தகைய மாணவர்களுக்கு தற்போது தொடங்கியுள்ள திட்டத்தின் கீழ்ப்பயிற்சி பெற்றால் உற்பத்தியைப் பெருக்கவும் வேலைவாய்ப்பை மேலும் அதிகரிக்கவும் முடியும் என்றார்.

நாடு முழுவதும் 17 அமைச்சகங்களின் வாயிலாக 2022-க்குள் 500 மில்லியன் பயிற்சி பெற்ற மனித ஆற்றலை உருவாக்க பிரதமர் இலக்கு நிர்ணயித்து உள்ளார். இவர்களுக்கு புதிய உற்பத்தித் கொள்கையின் பார்வை என்ற திட்டத்தின் கீழ் 100 மில்லியன் வேலைகள் உற்பத்தி துறையின் கீழ் 2025-க்குள் வழங்க இலக்கு நிர்ணயித்து இருப்பதாக தெரிவித்தார். தமிழ்நாட்டின் குறு, சிறு, நடுத்தர தொழில்துறையின் கீழ் சென்ற நிதியாண்டில் 900 திட்டங்கள் வாயிலாக 35 ஆயிரம் பேருக்கு பல்வேறு வகையான பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது என்றார். 

நடப்பு நிதியாண்டில் 1000 திட்டங்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 900 திட்டங்கள் வாயிலாக 40 ஆயிரம் பேருக்கு தொழில் தொடங்க பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார். பின்னர் பேசிய சன் ஆன்லைன் இந்தியா பிரைவேட் நிறுவனத்தின் தலைவரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான ஸ்ரீகாந்த் கிரிக்கெட் விளையாட்டில் எவ்வாறு பயிற்சி அளிக்கப்பட்டு வெற்றியைப் பெறுகிறோமோ அதே பாணியில்தான் படிப்படியாக படித்த வேலைவாய்ப்பற்றவர்களுக்கும் ஏற்கனவே தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு தன் திறனை வளர்த்துக்கொள்ள திறன் மேம்பாட்டுப் பயிற்சி பாடத்திட்டங்களை தமது நிறுவனம் தயாரித்துள்ளது. தமது நிறுவனத்தின் நோக்கமே எந்தத் துறையிலும் தமிழ்நாடு மாணவர்கள் படித்திருந்தாலும் வேலையில்லாமல் இருக்கிறோம் என்ற கவலை இல்லாமல் மாணவர்கள் இருக்கும் அளவிற்கு இந்தப் பயிற்சி இருக்கும் என்றார். இதுபோன்ற பயிற்சி முதல் கட்டமாக பொறியியல் மாணவர்களுக்கும்  தொடங்கப்படுவதாகவும் நாளடைவில் கலை, அறிவியல் படித்த மாணவர்களுக்கும் விரிவுபடுத்த உள்ளதாக ஸ்ரீ காந்த் தெரிவித்தார்.விவரம் வேண்டுவோர் சூசூசூ.ஷஹஙுடீடீஙுஙூசிஙுச்கூடீஙூ.ஷச்ஙி என்ற இணைய தளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்