முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரிட்சை

புதன்கிழமை, 23 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

அகமதாபாத், மார்ச். 24 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அகமதாபாத்தில் இன்று நடக்க இருக்கும் இரண்டாவது காலிறுதிச் சுற்றில் இந்திய அணி நடப் பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. உலகக் கோப்பை காலிறுதிச் சுற்று நேற்று வங்காளதேசத்தில் உள்ள மிர்பூர் நகரில் துவங்கியது. இதில் மே.இ.தீவு மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி அபார வெ ற்றி பெற்றது. 

இதனைத் தொடர்ந்து 2 -வது காலிறுதி ஆட்டம் குஜராத் மாநிலத்தின் தலைநகரான அகமதாபாத்தில் இன்று பகலிரவு ஆட்டமாக நடக்கிற து. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோத உள்ளன. ஐ.சி.சி.யின் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் அணியும், 2 -வது இடத்தில் இருக்கும் அணியும் மோதுவதால் இந்த காலிறு தியில் மிகுந்த விறுவிறுப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

காயம் காரணமாக மே.இ.தீவுக்கு எதிரான ஆட்டத்தில் சேவாக் விளையாடவில்லை. தற்போது அவர் முழு உடல் தகுதி பெற்று விட்டதா  ல், இன்றைய காலிறுதி ஆட்டத்தில் விளையாடுவார். 

துவக்க வீரராக சேவாக் பங்கேற்கும் பட்சத்தில், யூசுப் பதான் அல்லது ரெய்னா நீக்கப்படலாம். அதிரடி பேட்ஸ்மேனான யூசுப் பதான் தனது திறமையை இதுவரை வெளிப்படுத்தவில்லை. 

இதே போல பந்து வீச்சிலும் மாற்றம் இருக்கலாம் என்று தெரிய வரு கிறது. பயிற்சி ஆட்டத்தில், ஆஸ்திரேலிய வீரர்கள் லெக் ஸ்பின்னரா

ன பையூஸ் சாவ்லா பந்து வீச்சில் திணறினார்கள். 

இதனால் அவருக்கு வாய்ப்பு கொடுப்பது பற்றி தோனி யோசித்து வருகிறார். மேற்கு இந்தியத் தீவுக்கு எதிரான கடைசி லீக்கில் இந்திய வீரர்களின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. 

தமிழக வீரர் அஸ்வின் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன் படுத்திக் கொண்டார். அவர் தனது முதல் போட்டியிலேயே 2 விக்கெ ட் கைப்பற்றியது நினைவு கூறத்தக்கது. 

இரண்டு ஆப் ஸ்பின்னர்களில் ஹர்பஜன் சிங் சரியாக பந்து வீசவில் லை. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மட்டுமே நன்றாக வீசினார். சீனியர் வீரர் என்பதால் அவர் நீக்கப்படமாட்டார். 

அஸ்வின் சிறப்பாக வீசுவதால் அவரையும் நீக்கிவிடமுடியாது. பையூஸ் சாவ்லா கண்டிப்பாக அணிக்கு தேவைப்பட்டால் அஸ்வின் நீக்கப் படலாம். வீரர்கள் தேர்வில் தோனிக்கு கடும் நெருக்கடி உள்ளது. 

ஒரு பேட்ஸ்மேன், ஒரு பெளலர் தேர்வு செய்வதில் அவருக்கு கடும் பிரச்சினை இருக்கிறது. இந்திய அணி பேட்ஸ்மேன்கள் எதிர்பார்க்கும் வகையில் சிறப்பாக ஆடுவதில்லை. அவர்கள் ஒருங்கிணைந்து தங்களது முழுத் திறனையும் வெளிப்படுத்தி ஆடவேண்டும். 

முதலில் பேட்டிங் செய்து மிகப் பெரிய ஸ்கோரை எடுப்பதே இந்தி யாவுக்கு நல்லது. ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு எதிராக ரன் சேஸ் செய்வரது மிகுந்த சவாலானது. 

இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரை டெண்டுல்கர், சே வாக், காம்பீர், யுவராஜ் சிங், விராட் கோக்லி ஆகியோர் நல்ல நிலை யில் உள்ளனர். இது இந்திய அணிக்கு பலமாகும். 

பந்து வீச்சு, பீல்டிங்கில் இன்னும் முன்னேற்றம் தேவை. ஜாஹிர்கா

னை அதிகமாக நம்ப வேண்டியதாக இருக்கிறது. 2003 இறுதிப் போட்டியில் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரன்களை வாரி கொடுத்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்றைய ஆட்டத்தில் அவர் சிறப்பாக பந்து வீச வேண்டிய நிலையில் உள்ளார். 

ஆஸ்திரேலியாவின் பீல்டிங் சிறப்பாக இருக்கிறது. அதற்கு இணை 

யான பீல்டிங் இந்திய அணியில் இல்லை. ஆஸி. அணி கடைசி லீக்கில் ஆஸ்திரேலியாவிடம் மோசமாக தோற்றது. இதை இந்தியா சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இரு

அணிகளும் கடைசியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விசாகப்பட்டினத்தில் மோதின. இதில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையான இன்றைய ஆட்டம் பகலிரவு ஆட்டமாக நடக்கிறது. பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டி தூர்தர்ஷன், ஸ்டார் கிரிக்கெட், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்