முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்களிக்க வாக்காளர் அட்டை-பூத் சிலிப் மட்டுமே செல்லும்

திங்கட்கிழமை, 12 மார்ச் 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை,மார்ச.13 -   சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் வாக்களிக்க, வாக்காளர்கள் தேர்தல் ஆணையம் வழங்கிய வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்களை மட்டுமே எடுத்து வர வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- சங்கரன் கோவில் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது. 18 -ந்தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் தேர்தல் வேலையில் தீவிரம் காட்டி வருகிறார்கள். தேர்தலை நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

அதன் ஒரு பகுதியாக ஓட்டுப் போட வரும் வாக்காளர்கள் அடையாள அட்டை கொண்டு வருவது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் வாக்களிக்க வரும் வாக்காளர்கள் ஓட்டுச் சாவடிக்கு வரும் போது தேர்தல் ஆணையம் வழங்கிய அடையாள அட்டையை எடுத்து வர வேண்டும். வேறு எந்த ஆவணமும், அடையாள அட்டையாக கருத முடியாது.

வாக்காளர்கள் யாராவது தேர்தல் ஆணையம் வழங்கிய வாக்காளர் அடையாள அட்டையை தொலைந்து விட்டால் அவர்கள் தேர்தல் ஆணையம் வழங்கும் பூத் சிலிப்களை அடையாள சான்றாக கொண்டு வந்து வாக்களிக்கலாம். மார்ச் 14 -ந்தேதி முதல் வாக்குச் சாவடி அதிகாரிகளால் வாக்காளர்களுக்கு பூத் சிலிப்கள் வழங்கும் பணி நடைபெறும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்