முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலவச லேப்டாப் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது

திங்கட்கிழமை, 12 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

இந்தியாவின் தலைசிறந்த பல்கலைகழகங்களில் ஒன்றான அண்ணா பல்கலைகழகத்தில் செயல்படுத்தப் படவுள்ளது இறுதியாண்டு என்ஜினியரீங் படிக்கும் 991 மாணவர்களுக்கு இந்த இலவச லேப்டாப் வழங்கப்பட உள்ளதாக துணை வேந்தர் மன்னர் ஜவஹர் தெரிவித்துள்ளார். இது குறித்த விபரம் வருமாறு : தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பிளஸ்​2 படிக்கும் மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இலவச லேப்-​ டாப் வழங்கும் திட்டத்தை முதல்​ அமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தி வருகிறார். இதன் முதற்கட்டமாக 2011​2012-​ம் ஆண்டுக்கு 9 லட்சத்து 12 ஆயிரம் மாணவ, ​மாணவிகளுக்கு இலவச லேப்​ டாப் வழங்கும் பணி நடந்து வருகிறது. இதில் ஏற்கனவே பிளஸ்​2 மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இலவச லேப்-​ டாப் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அண்ணா பல்கலைக் கழகத்தில் படிக்கும் இறுதியாண்டு மாணவ​ மாணவிகள் 991 பேர்களுக்கு இலவச லேப்​ டாப் வழங்கப்பட உள்ளது.  இதுபற்றி அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறியதாவது:​​ தமிழக அரசு வழங்கி வரும் இலவச லேப்-​ டாப் திட்டம் கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு படிக்கும் மாணவ,​ மாணவிகளுக்கு அடுத்த வாரம் வழங்கப்பட உள்ளது. குரோம்பேட்டை எம்.ஐ.டி. யில் படிக்கும் மாணவர்கள், அண்ணா தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள், தொழில் நுட்ப கட்டமைப்பு படிக்கும் மாணவர்களுக்கும், லேப்-​ டாப் வழங்க உள்ளோம். என்.ஆர்.ஐ. மாணவர்களுக்கு இது வழங்கப்பட மாட்டாது. மற்ற என்ஜினீயரிங் கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு பின்னர் படிப்படியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மன்னர் ஜவகர் கூறினார். கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் லேப்-​ டாப்பை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் பார்வையிட்டு செயல்படுத்தி பார்த்தபோது மிகவும் தரமாக உள்ளதாக கூறினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!