முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிமுக வேட்பாளர் குருவிகுளத்தில் தீவிர பிரச்சாரம்

செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

சங்கரன்கோவில்.மார்ச்.14 - சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமாக ஜெயலலிதா இன்று வருகை தர உள்ளார். அதனால் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். நேற்று தொகுதிக்க உட்பட்ட குருவிகுளம் ஒன்றியத்தில் வேட்பாளர் முத்துசெல்வி தீவிர பிரச்சாரத்தில் ்டுபட்டார். அவருடன் குருவிகுளம் ஒன்றிய பெருந்தலைவர் ராமலட்சுமி பாண்டியராஜன், ஒன்றிய செயலாளர் ராமசாமிபாண்டியன், முன்னாள் ஒன்றிய செயலாளர் கந்தசாமி, கவுன்சிலர் ஜெயலட்சுமி உள்ளிட்ட ஏராளமானவர்கள் உடன்சென்றனர். 

 

அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகர் ராமராஜன் தீவிர பிரச்சாரம்

 

சங்கரன்கோவில் நகரில் அதிமுக வேட்பாளர் முத்துசெல்வியை ஆதரித்து நடிகரும் முன்னாள் எம்பியுமான ராமராஜன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் கூறும் போது அதிமுகவிற்கு துரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்டுங்கள், தற்போது விஜயகாந்த எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் அம்;மா தான். அவர் அந்த நன்றியை மறந்து விட்டார். அவருக்கு சங்கரன்கோவில் தொகுதி மக்கள் நிச்சயம் பாடம் புகட்ட வேண்டும். தற்போது தான் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. அதற்கு காரணம் அம்மா ஆட்சிதான். இந்த நல்லாட்சி தொடர இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டினார். அவர் சங்கரன்கோவில் திருவிக தெரு, மற்றும் சேர்ந்த மரம் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருடன் செந்தமிழன் எம்எல்ஏ மாநில மாணவரணி செயலாளர் சரவண பெருமாள், சங்கரன்கோவில் நகரசெயலாளர் கண்ணன், மாநில பேச்சாளர் சங்கை கணபதி உள்ளிட்டவர்கள் சென்றனர்.

 

அமைச்சர் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்

 

சங்கரன்கோவில்.மார்ச்.14. சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பணியில் ்டுபட்டிருந்த தமிழக நிதி அமைச்சரும் பொருளாளருமான ஒ.பன்னீர்செல்வம் முன்னிலையில் மாற்றுக்கட்சியின் திமுக, காங்கிரஸ் மற்றும் கட்சிகளில் இருந்து அதிமுகவில் இணைந்தனர். இதில் வெள்ளப்பனேரி பகுதி திமுக பொறுப்பாளர் அனைவரும் அதிமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் ஒ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், கழக அவைத்தலைவர் மதுசூதனன், முன்னாள் எம்எல்ஏ சுப்பையாபாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்