முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்று திறனாளிகளுடன் கலெக்டர் சகாயம் படகுசவாரி

செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,மார்ச்.14 - மதுரை மாவட்டம் நாகனாகுளம் கண்மாயில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 8 இருக்கைகளுடன் கூடிய நவீன இயந்திர விசைப்படகில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் பயிற்சி அளிக்கப்பட்டுவரும் பயிற்சியாளர்களை ஊக்கப்படுத்துகின்ற வகையில் மாவட்ட கலெக்டர் உ .சகாயம் படகு சவாரி மேற்கொண்டார். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.  இந்த பயிற்சியில் மாற்றுத்திறனாளி இந்திரா, விஜயலட்சுமி, லட்சுமணன், வாசுதேவன் மற்றும் திருநங்கை சொப்னா ஆகியோர்களை ஊக்கப்படுத்துகின்ற வகையில் நேற்று மாவட்ட கலெக்டர்.உ.சகாயம்,  நாகனாகுளம் கண்மாயில் படகு சவாரி மேற்கொண்டார்.  

பின்னர் மாற்றுத்திறனாளிகளை ஊக்கப்படுத்துகின்ற வகையில் பயிற்சியை திறம்பட பெற்று வெகுவிரைவில் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளாக வரவேண்டும் என்று வாழ்த்தினார்.  பின்னர் நாகனாகுளம் கண்மாய் கரையோரப்பகுதியில் குழந்தைகள் பூங்கா அமைப்பதற்கான இடத்தினையும் பார்வையிட்டு உடனடியாக அளந்து விரைந்து முடிக்க வருவாய்த்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.  

மேலும், பாரம்பரியமிக்க மாட்டுவண்டி, குதிரைவண்டி சவாரிகள உழவன் உணவகத்திலிருந்தும் படகு சவாரி செய்ய வருபவர்களுக்கு பயன்படுகின்ற வகையில் விரைவில் மாட்டுவண்டி, குதிரை வண்டிகளை இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் முனைப்போடு செயல்படுத்தி வருகிறது என்றார்.  

இந்நிகழ்ச்சியில் ஐ.பி.எஸ் பயிற்சி சரோஜ்குமார்டாகுர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெய்சிங்ஞானதுரை, சுற்றுலா அலுவலர் தர்மராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் .சி.செல்வராஜ் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்