முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரகாண்ட் முதல்வராக விஜய்பகுகுணா பதவியேற்றார்

செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

டேராடூன், மார்ச் 14 - உத்தரகாண்ட் புதிய முதல் அமைச்சராக விஜய்பகுகுணா நேற்று பதவியேற்றுக்கொண்டார். உத்தரகாண்ட் சட்டசபையின் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 32 இடங்களும், பாரதிய ஜனதா கட்சிக்கு 31 இடங்களும் சுயேட்சைகளுக்கு 7 இடங்களும் கிடைத்தன. எந்த கட்சிக்கும் அறுதிபெரும்பான்மை கிடைக்காத நிலையில் அதிக இடங்களை கைப்பற்றிய கட்சி என்ற வகையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உரிமைகோரியது. இதற்கு கவர்னர் அனுமதி அளித்தார். ஆனால் யார் முதல்வர் என்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் குழப்பம் நிலவியது. ஒரு கட்டத்தில் 15 பேர் முதல்வர் பதவிக்கான போட்டியில் இருந்தனர். என்றாலும் யார் முதல்வர் என்பது குறித்து தீர்மானிக்க மத்திய அமைச்சர் குலாம்நபி  ஆசாத் தலைமையில் மேல்மட்ட பார்வையாளர்கள் குழு புதிய எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தியது. அதன்பிறகு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக விஜய்பகுகுணா தேர்ந்தெடுக்கப்பட்டு அவரே முதல்வராக பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று டேராடூனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் புதிய முதல்வராக விஜய்பகுகுணா பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் மார்க்கரெட் ஆல்வா பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். வேறு யாரும் புதிய அமைச்சர்களாக பதவியேற்கவில்லை. இந்த பதவியேற்பு விழாவில் 15 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே பங்கேற்றனர். மற்றவர்கள் பதவியேற்பு விழாவிற்கு வரவில்லை. உத்தரகாண்ட் தேர்தலில் காங்கிரஸ் கட்சியிக்கு முழு வீச்சில் பாடுபட்டவர் மத்திய அமைச்சர் ஹரீஸ் ரவாத். இவர்தான் முதல்வராக வரவேண்டும் என்று பலரும் விரும்பினார்கள். ஆனால் அவருக்கு முதல்வர் பதவி கொடுக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த ஹரீஸ் ரவாத் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினா செய்தார். அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் 16 எம்.எல்.ஏ.க்கள் இந்த பதவியேற்பு விழாவை புறக்கணித்து உள்ளனர்.  இதனால் உத்தரகாண்ட் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்