முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய கூட்டணியிலிருந்து தி.மு.க. விலக வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.14 - மத்திய காங்கிரஸ் கூட்டணியிலிருந்து தி.மு.க. விலகவேண்டும்மென திராவிடர் கழகத் தலைவர் இது குறித்து திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:- இலங்கை அரசு மனித உரிமைகளை மீறிய போர்க் குற்றங்களைப் புரிந்துள்ளது என்பதை அய்.நா.மன்றம் அமைத்த தனிக்குழு தந்த அறிக்கையின் மீது, ஜெனிவாவில் கூடும் மனித உரிமைக் குழு மன்றத்தின் முன், போர்க் குற்றங்களைப் புரிந்துள்ள இலங்கை இராஜபக்சே அரசினைக் கண்டிக்கும் தீர்மானம் - அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் என்பதைத் தெளிவாகக் கூறிடும் நிலையில், இந்திய அரசு அத்தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்பதை அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. அதன் தலைவர் பல முறை வற்புறுத்தியுள்ளார்கள். அதோடு அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேரில் அதன் தலைவர் மூலம் வற்புறுத்தியுள்ளனர்.  

தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளும் ஏன் காங்கிரஸ் கட்சி உட்பட வற்புறுத்தி, தங்கள் உணரவுகளைத் தெரிவித்து விட்டனர். தமிழக ஆளுங்கட்சி, முதல்வர், இடதுசாரி கட்சிகள் உட்பட பலரும் இதில் ஒரே குரலில் வற்புறுத்தி விட்டனர். இப்பிரச்சினையால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

நேற்று காலை நாடாளுமன்ற இரு அவைகளிலும் தி.மு.க., அ.தி.மு.க. இடதுசாரிகள், பா.ஜ.க, உட்பட எதிர்கட்சிகள் வற்புறுத்தியுள்ளன!

இந்திய அரசு தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற இரு அவைகளிலும் உணர்ச்சி உச்சக் கட்டத்திற்குச் சென்றுள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குடியரசுத் தலைவரின் உரையில் கூட தமிழ்நாட்டு மக்களின் உணர்வை மதிக்கும் வகையிலான உத்தரவாதம் இல்லை; ஒப்புக்காக இரண்டு வரிகள் என்கிற அளவிலேயே இடம் பெற்றுள்ளது. இது தமிழ்நாட்டு மக்களின் உணர்வைக் கிஞ்சிற்றும் மதிக்காத வஞ்சிக்கும் போக்காகவே கருதப்படும்.

இந்நிலையில் இன்னமும் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு ``வெண்டைக்காய், விளக்கெண்ணெய், கத்தாழை, கலந்ததாக இருப்பது மிகவும் வேதனைக்கும் கண்டனத்திற்கும் உரியது!

தமிழ்நாட்டையும் காங்கிரஸ் கட்சி கை கழுவி விடத் தயாராக விட்டது என்பதையே இது காட்டும், அப்படி ஒரு நிலை ஏற்படும் பட்சத்தில் தி.மு.க. தலைவர் எவ்வளவோ வேண்டுகோள் மேல்வேண்டுகோளுக்கு கொடுத்த பிறகும் மேலும் பிடிவாதம் காட்டினால், தி.மு.க. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் தொடருவதுபற்றி தன் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசரமும் அவசியமும் ஆகும்.

மத்திய ஆட்சி என்பது வெறும் காங்கிரஸ் ஆட்சி அல்ல; அய்க்கிய முற்போக்குக கூட்டணி அரசு என்பதை ஏனோ வசதியாக மறந்துவிட்டு, அவர்கள் நினைப்பதுதான் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் நிலைப்பாடு என்று செயல்படுவது - கூட்டணி முறைக்கே விரோதமான போக்கு அல்லவா?

தி.மு.க. இது பற்றி சந்தித்து, இனிமேலும் அதில் தொடருவது விரும்பத்தக்கதல்ல என்பதால் நமது அன்பான வேண்டுகோள் - உலகத் தமிழர்கள் முதல் உள்ளூர் தமிழ்ர்கள் வரை அனைவரின் உள்ள உணர்வுகள், நிலைப்பாடு இதுவேதான்.

டில்லி அரசு இதில் தனது பிடிவாதததைத் தொடர்ந்தால் ஏற்கெணவே ஏற்பட்ட அபவாதம் என்ற பழியிலிருந்து தி.மு.க. மீளுவதற்கு இது சரியான சந்தர்ப்பம் என்பது நமது வேண்டுகோள் என்று தனது அறிக்கையில் வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago