முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜயகாந்த் வெற்றியை எதிர்த்து வழக்கு: 15-ம் தேதி தீர்ப்பு

செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.14 - ரிஷிவந்தியம் தொகுதியில் தே.மு.தி.க. தலைவர் விஜய காந்த் வெற்றி பெற்றது செல்லாது என்று தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் வரும் 15-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. ரிஷிவந்தியத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் ஜெயந்தி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- சுயேட்சை வேட்பாளரான நான் ரிஷிவந்தியம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய சென்ற போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிவராஜின் ஆட்கள் என்னுடைய கணவரை கத்தியால் குத்தி காயப்படுத்தி, என் கையில் இருந்த வேட்பு மனுவை பிடிங்கி சென்று விட்டனர். பிறகு நான் புதிய வேட்பு மனுவை தாக்கல் செய்தேன். தேர்தல் அதிகாரியும் அதனை பெற்று கொண்டார். பிறகு அந்த மனுவில் கையெழுத்து சரியில்லை என கூறி என்னுடைய மனுவை நிராகரித்து விட்டார்.

எனவே நடந்து முடிந்த இந்த தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும். ரிஷிவந்தியம் தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் நீதிபதி வெங்கடராமன் இறுதி விசாரணை நடத்தினார் .அப்பொழுது, 

நடிகர் விஜயகாந்த் சார்பில் வழக்கறிஞர் மணிமாறன் வாதித்தட்டதாவது:-

விஜயகாந்த் மீதான தேர்தல் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். ரிஷிவந்தியம் தொகுதியில் நடந்த இந்த சம்பவம் ஊழல் நடவடிக்கை என வாதித்தார்.

மனுதாரர் ஜெயந்தி சார்பில் வழக்கறிஞர் சி.பிரகாசம் வாதிடும் போது, இந்த தேர்தல் முறைகேடாக நடந்துள்ளது. எனவே தேர்தல் முடிவை ரத்து செய்ய வேண்டும் என்றார். தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கறிஞர் ராகவன் வாதிடும்போது,  தேர்தல் முறையாகதான் நடந்திருக்கிறது. எனவே நடந்து முடிந்த தேர்தலை ரத்து செய்ய முடியாது என்றார்.

இவர்களது வாதங்களை கேட்டறிந்த நீதிபதி வெங்கடராமன், இந்த வழக்கின் தீர்ப்பு வரும் மார்ச்.15-ம் தேதி அறிவிக்கப்படும் என உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்