முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிர சட்டசபையில் கூச்சல் - குழப்பம்

புதன்கிழமை, 23 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

மும்பை, மார்ச் 24 - மகாராஷ்டிர சட்டசபையில் நேற்று பட்ஜெட் தாக்கலின்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள்  கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதால் பட்ஜெட் தாக்கல் செய்வதில் சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது. மகாராஷ்டிர சட்டசபையில் நேற்று துணை முதல்வரும் நிதி அமைச்சருமான அஜீத்பவார் பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார்.

அப்போது பிரதான எதிர்க்கட்சிகளான பா.ஜ.க. மற்றும் சிவசேனா  கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

சஞ்சய் காந்தி நிர்தார் யோஜனா உள்ளிட்ட பல குழுக்களில் எதிர்க்கட்சிகளை இந்த அரசு  ஓரம் கட்டி வருகிறது என்று குற்றம்சாட்டி எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால் பட்ஜெட் உரையை வாசிப்பது தடைபட்டது.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் திலீப் வால்சே பாட்டீல் எதிர்க்கட்சியினர் தெரிவித்த கருத்துக்கள் எதுவும் சபைக்குறிப்பில் இடம் பெறாது என்று கூறினார்.

பிறகு அஜீத்பவாரை தொடர்ந்து பட்ஜெட்டை வாசிக்குமாறு பணித்தார். இதை அடுத்து பட்ஜெட் உரையை அவர் வாசித்து  முடித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்