முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.6,100 கோடிக்கான ரயில்வே பட்ஜெட் தாக்கல்

வியாழக்கிழமை, 15 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மார்ச்.15 - 2012-2013-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் நேற்று பாராளுமன்ற லோக்சபையில் தாக்கல் செய்யப்பட்டது. ரூ.6 ஆயிரத்து 100 கோடிக்கான பட்ஜெட்டை மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திவாரி தாக்கல் செய்தார். இதில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பிளாட்பாம் டிக்கெட் கட்டணமும் ரூ.5 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதனையடுத்து மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதம்தாம் இரண்டு பட்ஜெட்களும் தாக்கல் செய்யப்பட்டது. உத்திரப்பிரதேசம் உள்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்ததால் இந்தாண்டு பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. 5 மாநில தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு பாராளுமன்ற பட்ஜெட் கூட்டம் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. முதல் நாளன்று பாராளுமன்ற இருசபைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றினார். அப்போது இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து எதுவும் குறிப்பிடாததால் அ.தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்றுமுன்தினமும் இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. உறுப்பினர்கள் வலியுறுத்தினர். நேற்று ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திவாரி தாக்கல் செய்தார். ரயில்வே நிதி ஆதாரத்தை பெருக்கும் வகையில் 60,100 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் ரயில் பயணிகள் கட்டணத்தை உயர்த்தியுள்ளார். அதேசமயத்தில் ரயில் மற்றும் அதில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவற்றிருக்கும் அமைச்சர் திரிவேதி, பட்ஜெட்டில் ஓரளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். ரயில் கட்டணத்தை ஒரு கிலோ மீட்டருக்கு 2 பைசா முதல் 30 பைசாவரை உயர்த்தியுள்ளார். சாதாரண மற்றும் ஏழை மக்கள் பயணம் செய்யும் இரண்டாம் வகுப்பு கட்டணம் கிலோ மீட்டருக்கு 2 பைசா வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக ரயில் கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்தது. அதன் பிறகு இந்தாண்டுதான் ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண பயணிகள் மற்றும் புறநகர் ரயில் கட்டணம் ஒரு கிலோ மீட்டருக்கு 2 பைசா வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. சிலீப்பர் ரயில் கட்டணம் ஒரு கிலோ மீட்டருக்கு 5 பைசா வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. வசதி படைத்தவர்கள், உயரதிகாரிகள் மற்றும் அதிக சம்பளம் வாங்குபவர்கள், வசதியுள்ளவர்கள் பயணம் செய்யும்  ஏ.சி 111-க்கு ஒரு கிலோ மீட்டருக்கு 10 பைசாவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏ.சி.11-க்கு ஒரு கிலோமீட்டருக்கு 15 பைசா வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏ.சி.1-க்கு ஒரு கிலோ மீட்டருக்கு 30 பைசாவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. பிளாட்பாம் டிக்கெட் கட்டணம் ரூ.3-லிருந்து 5 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  கூடுதலாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் விடப்படும். மேலும் ரயில்களுக்கும் ரயிலில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். இதற்காக சுய அதிகாரம் உள்ள ரயில் பாதுகாப்பு ஆணையம் அரசியல் சட்டப்பூர்வத்துடன் அமைக்கப்படும். ரயில்வே நிலையங்களுக்கு பாதுகாப்பு மற்றும் இதர தேவையான வசதிகளை கவனிப்பதற்காக ரயில்வே நிலைய வளர்ச்சி கழகமும் ஏற்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அமைச்சர் திரிவேதி அறிவித்தார். ரயில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து சிபாரிசு செய்துள்ள அனில் ககோத்கர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கமிட்டியின் சிபாரிசு அடிப்படையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படும். நாட்டில் சுமார் 90 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில்பாதை புதுப்பிக்கப்படுவதோடு அதன் தரமும் உயர்த்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 6 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில்பாதை மின்சாரமயமாக்கப்படும். இந்த மாத இறுதிக்குள் சுமார் 725 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் பாதை அமைக்கும் பணி முடிவடையும். 2012-2013-ம் ஆண்டில் 700 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய ரயில்பாதை அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வரும் நிதியாண்டில் 750 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரட்டை ரயில் பாதைகள் போடப்படும் என்றும் அமைச்சர் திரிவேதி கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்