முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில் கட்டணத்தை அதிகம் உயர்த்தவில்லை: திரிவேதி

வியாழக்கிழமை, 15 மார்ச் 2012      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி,மார்ச்.15 - ரயில் கட்டணத்தை அதிக அளவு உயர்த்தக்கோரி எனக்கு ஆலோசனை கூறப்பட்டது. ஆனால் பொதுமக்களின் நலன் கருதி குறைந்த அளவே ரயில் கட்டணத்தை உயர்த்தியுள்ளேன் என்று ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி கூறினார்.  2012-2013-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் நேற்று பாராளுமன்ற லோக்சபையில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை ரயில்வே அமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான தினேஷ் திவாரி தாக்கல் செய்தார். இவர் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர். ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணத்தை ஒரு கிலோ மீட்டருக்கு 2 பைசா வீதம் 30 பைசா வரை உயர்த்தியுள்ளார். இந்த கட்டண உயர்வு குறைந்தது என்ற அர்த்தத்தில் அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்து கூறினார். 

ரயில்வே பட்ஜெட் கடந்த 8 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. அதனால் ரயில்வே நிதிநிலையை பெருக்கும் வகையில் ரயில் கட்டணத்தை அதிக அளவு உயர்த்தும்படி எனக்கு ஆலோசனை கூறப்பட்டது. ஆனால் நான் நாட்டின் ஏழைகள், அப்பாவி மக்கள், சாதாரண மக்கள் ஆகியோர்களின் நலனை கருத்தில் கொண்டு ஓரளவுதான் உயர்த்தியுள்ளேன் என்று ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து திரிவேதி கூறினார். சுமார் 100 நிமிட நேரம் திரிவேதி பேசினார். அப்போது அவர் கூறுகையில் கஷ்டமான காலக்கட்டத்தை ரயில்வே துறை கடந்து கொண்டியிருக்கிறது. இந்த கட்டண உயர்வு சாதாரண மக்களை ஓரளவு பாதிக்கும். இந்த பாதிப்பை தாங்கும் அளவுக்குத்தான் ஓரளவு கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக ரயில்களை இயக்க உதவும் எரிபொருள் விலை கூடிக்கொண்டே போய்கிறது. அதற்கு ஆகும் செலவு அளவுக்கு ரயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்