முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருத்துக் கணிப்புகள் வெளியிட தடை: பிரவீன் குமார்

வியாழக்கிழமை, 15 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,மார்ச்.15 -  சங்கரன்கோவில் இடைத்தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார்  வெளியிட்ட அறிக்கைவருமாறு:- சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வாக்குப் பதிவு வரும் 18ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதையடுத்து கருத்து கணிப்புகள், ஒட்டுப்பதிவுக்கு பிந்தைய கணிப்புகள் போன்றவற்றை வெளியிட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. ஓட்டுப்பதிவு நடக்கும் 18ம் தேதி அன்று காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை கருத்து கணிப்புகளை எந்த ஊடகமும் வெளியிட தடை விதிக்கப்படுகிறது. 

இவ்வாறு பிரவீன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்