முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாக இருக்கும்

வெள்ளிக்கிழமை, 16 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,மார்ச்.16  - நாட்டின் வளர்ச்சி 6.9 சதவீதமாக இருக்கும் என்று பொருளாதார ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பாராளுமன்றத்தில் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய நாள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த ஆய்வு அறிக்கையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அதேமாதிரி நேற்று மத்திய அரசு சார்பாக நாட்டின் வளர்ச்சி குறித்த பொருளாதார அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் நாட்டின் வளர்ச்சி விகிதம் 6.9 சதவீதமாக இருக்கும். மேலும் உள்நாட்டு உற்பத்தி விகிதம் 7.6 சதவீதமாக அமையும். இது அடுத்த நிதியாண்டில் 8.6 சதவீதமாக உயரும். விவசாயம் மற்றும் சேவை துறைகளின் வளர்ச்சி 2.5 சதவீதமாக இருக்கும். தொழில்துறை வளர்ச்சி 4 முதல் 5 சதவீதமாக இருக்கும். இதனை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். பணவீக்க விகிதம் உயர்வாகவே இருக்கும். ஆனால் ஆண்டு இறுதிக்குள் இதை குறைக்க முயற்சி மேற்கொள்ளப்படும். உணவு பணவீக்க விகிதம் 2010-ல் 20.2 சதவீதமாக இருந்தது. இந்தாண்டு ஜனவரியில் 1.6 சதவீதம் குறைந்துள்ளது. இதனை மேலும் மேம்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும். உலகில் இந்தியா, வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக திகழும். நிதி மூலதனம் மற்றும் சேமிப்பு உயரும். தற்போதைய நிதியாண்டின் முதல் பாதியில் ஏற்றுமதி 40.5 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இறக்குமதி 30.4 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. சமூக சேவைகளுக்கான மத்திய செலவு 2006-7-ம் ஆண்டில் 13.4 சதவீதமாக இருந்தது. தற்போது இது 18.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாட்டின் வளர்ச்சி மற்றும் மாசுபாடு ஆகியவற்றிருக்கு மிகுந்த முன்னுரிமை கொடுக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago