முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 10 வேட்பாளர்கள் அறிவிப்பு

வியாழக்கிழமை, 24 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருச்சி. மார்ச்.24 - இந்திய கமியூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாககுழு கூட்டம் ஏ.எம்.கோபு தலைமையில் திருச்சி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய செயலாளர் டி.ராஜா, மாநில செயலாளர் தா.பாண்டியன், தேசிய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, மாநில துணை செயலாளர்கள் சி.மகேந்திரன், ஜி.பழனிசாமி, ஆர்.முத்தரசன், டாக்டர் வே.துரைமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டார்கள். 

இந்த கூட்டம் முடிந்ததும் மாநில செயலாளர் தா.பாண்டியன் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 10 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

 

1. திருத்துறைப்nullண்டி(தனி)  - கே.உலகநாதன்

2. சிவகங்கை - எஸ்.குணசேகரன்

3.ஸ்ரீவில்லிபுத்தூர்(தனி) - வி.பொன்னுப்பாண்டி

4.புதுக்கோட்டை - எஸ்.பி.முத்துக்குமரன்

5.தளி   - டி.ராமச்சந்திரன்

6.வால்பாறை (தனி) - எம்.ஆறுமுகம்

7.பென்னாகரம் - ந.நஞ்சப்பன்

8.குன்னூர் - ஏ.பெள்ளி

9.பவானி சாகர்(தனி) - பி.எல்.சுந்தரம்

10.குடியாத்தம் (தனி) - கு.லிங்கமுத்து

பின்னர் தா.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

 அறிவிக்கப்பட்ட 10 வேட்பாளர்களில் எம்.எல்.ஏவாக உள்ள உலகநாதன், எஸ்.குணசேகரன், டி.ராமச்சந்திரன் ஆகிட 3 பேர்களும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் 5 தனி தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நிறுத்தி உள்ளோம். குன்னூர் தொகுதி மலைவாழ் பகுதி என்பதால் மலைவாழ் இன மக்கள் சேர்ந்த பெள்ளி என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார்.

அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் 3 பேர் பட்டதாரிகள். ஒருவர் வழக்கறிஞர். ஆனால் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படாதது வருத்தத்திற்குரியது. மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் கட்சிக்கும் பலம் உண்டு எங்கள் அணிக்கும் மிகுந்த பலம் உண்டு. 

நிச்சயமாக 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறுவது உறுதி. மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 2011 சட்டமன்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். அனைத்து தரப்பு மக்களும் வாங்கி படித்தாலே எல்லா தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தமிழக தேர்தலை உற்று நோக்கி உள்ளார்கள். தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரத்தில் அகில இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஏ.பி.பரதன், சுதாகர் ரெட்டி, டி.ராஜா, அதுல்குமார் ஆகியோர்கள் பிரச்சாரம் செய்வார்கள். தமிழகத்தில் நடைபெற இருக்கும் இந்த தேர்தலில் திமுகவின் குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதுதான் எங்கள் கூட்டணியின் முக்கிய நோக்கம். இதற்கு தமிழக மக்களும் எங்களோடு சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony