முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாதிக்பாட்ஷா கொல்லப்பட்டாரா? அவிழாத மர்ம முடிச்சுக்கள்

வியாழக்கிழமை, 24 மார்ச் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை,மார்ச்.24 - ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்ட தொழில் அதிபர் சாதிக் பாட்ஷா, தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் திட்டமிட்டே கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படும் நிலையில், சாதிக் பாட்ஷா வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதற்கு ஏதுவாக அரங்கேற்றப்பட்ட செயற்கையான நாடகம்தான் இது என்றும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், சாதிக் பாட்ஷா விவகாரத்தில் மர்மம் மென்மேலும் வலுத்துவருகிறது.

நாட்டிற்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கைது செய்யப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆ.ராசாவின் நெருங்கிய கூட்டாளியான சாதிக் பாட்ஷா, சென்னை தேனாம்பேட்டையில் எஙுடீடீடூ ஏச்சீஙூடீ டஙுச்ஙிச்சிடீஙுஙூ என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைமாறிய பணம் சாதிக்  பாட்ஷா மூலமாக வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாயின. இதனைத் தொடர்ந்து, அவரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினார்கள். ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கருணாநிதியின் இரண்டாவது மனைவி தயாளு, மூன்றாவது மனைவியின் மகள் கனிமொழி ஆகியோரிடமும் சி.பி.ஐ விசாரணை நடத்தியது. இதன்  தொடர்ச்சியாக, டெல்லியில் சி.பி.ஐ அதிகாரிகள் கடந்த 16-ம் தேதி, சாதிக் பாட்ஷாவிடம் விசாரணை நடத்த இருந்தனர். இதற்காக டெல்லி செல்லும் விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த சாதிக் பாட்ஷா, அன்றைய தினம் பகல் 1 மணியளவில் தேனாம்பேட்டையில் தனது இல்லத்தில், தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சாதிக் பாட்ஷாவின் திடீர் மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

வீட்டிலிருந்து தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட சாதிக்பாட்ஷாவின் உடல், பின்னர் அந்த மருத்துவமனையிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டபோது, முழுவதுமாக துணியால் மூடப்பட்டது ஏன்?

வீட்டின் இருந்து, தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் வண்டியில் சாதிக் பாட்ஷா ஏற்றப்பட்டபோதே, அவர் இறந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், அதன் பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியம் என்ன?

சாதிக் பாட்ஷா இறந்து 3 மணி நேரம் வரை, உடல் இருந்த தனியார் மருத்துவமனைக்கோ, பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட ராயப்பேட்டை மருத்துவமனைக்கோ அவரது மனைவி வராதது ஏன்?

சாதிக் பாட்ஷா தற்கொலை செய்து கொண்டபோது அணிந்திருந்த உடைகள், தனியார் மருத்துவமனையில் அகற்றப்பட்டது ஏன்?

கொலையா? தற்கொலையா? என்பதைக் கண்டுபிடிக்கப்பதற்கான தடயங்களை மறைப்பதற்காக அவரது உடைகள் திட்டமிட்டே அகற்றப்பட்டனவா?

சாதிக் பாட்ஷா தூக்கில் தொங்கியதாகக் கூறப்படும் அறையின் மொத்த உயரம் 9 அடி. அதில் மூன்றேகால் அடி உயரத்திற்கு கம்பி பொருத்தப்பட்டுள்ளது. மீதமுள்ளது ஐந்தேமுக்கால் அடி ஐந்தரை அடி உயரமுள்ள சாதிக் பாட்ஷா எவ்வாறு அதில் தற்கொலை செய்து கொள்ள முடியம்?  என்ற பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

கருணாநிதி மகள் கனிமொழியிடம் விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள், டெல்லி நீதிமன்றத்தில் வரும் 31-ம் தேதிக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவுள்ளனர். இதனிடையே, சாதிக் பாட்ஷா அப்ரூவராக மாற முடிவு செய்திருந்ததாகவும், இதனை அறிந்த சிலர் தொடர்ந்து சாதிக் பாட்ஷாவை மிரட்டி வந்தததாகவும் கூறப்படுகிறது. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் சாதிக் பாட்ஷாவிற்கு துளியும் கிடையாது என்று அவரது நண்பர்கள் தெரிவிக்கிறார்கள். சாதிக் பாட்ஷாவின் உடலில் கொலைக்கான அடையாளங்கள் இருப்பதாகவும் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறுகின்றனர். இதுமட்டுமின்றி, இது திட்டமிட்ட படுகொலை என்றும் பல்வேறு தரப்பினர் தெரிவிக்கிறார்கள்.

இதனிடையே, சாதிக் பாட்ஷா விவகாரத்தில் அரங்கேற்றப்பட்டவை அனைத்தும் செயற்கையான நாடகமே என்றும், அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதற்கு ஏதுவாக இந்த நாடகம் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சாதிக் பாட்ஷாவை வெளிநாட்டிற்கு அனுப்பிவிட்டு, ஏற்கனவெ இறந்துபோன வேறு ஒருவரின் உடலை, சாதிக் பாட்ஷா உடல் எனக் கூறி, மோசடி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக, சாதிக் பாட்ஷாவின் உடலை, பிரேதப் பரிசோதனை செய்த சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை டாக்டர்.ய.டெக்கால் (ய.ஈஉகூஹங்) தான்பரிசோதனை நடத்தியது சாதிக் பாட்ஷாவின் உடல்தானா? என்பது தனக்குத் தெரியாது என்றும், தன்னிடம் அளிக்கப்பட்ட உடல், சாதிக் பாட்ஷாவின் உடல் என்று போலீசார் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான விராசணை கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களையும், குடும்ப நிறுவனத்தையும் நெருங்கியுள்ள நிலையில், ஊழலில் முக்கியத் தொடர்புடைய சாதிக் பாட்ஷா, தற்கொலை செய்து கொண்டாரா? திட்டமிட்டே கொலை செய்யப்பட்டாரா? அல்லது வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டாரா? என பல்வேறு சந்தேகங்கள் எழுந்திருப்பது மர்ம முடிச்சுக்களை மென்மேலும் வலுவடையச் செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony