முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரி விதிப்பு எதிரொலி: தங்கம் விலை மேலும் எகிறும்

சனிக்கிழமை, 17 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, மார்ச். 17 - பாராளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரி விதிப்புகளின் எதிரொலியாக தங்கம் விலை மேலும் உயரும். மேலும் ஏ.சி, பிரிட்ஜ், சைக்கிள், சிகரெட் ஆகியவற்றின் விலைகளும் உயருகிறது. பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 12 ம் தேதி துவங்கியது. அப்போது பாராளுமன்றத்தின் லோக்சபை, ராஜ்யசபை ஆகிய இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் கொள்கைகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து கடந்த 14 ம் தேதி 2012 - 13 ஆம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே துறை அமைச்சர் தினேஷ் திரிவேதி தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ரயில் பயணிகள் கட்டணம் கணிசமான அளவுக்கு உயர்த்தப்பட்டது.  

இந்த நிலையில் நேற்று மத்திய அரசின் பொது பட்ஜெட்டை  மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி லோக்சபையில் தாக்கல் செய்தார். வருமான வரி விலக்கு உச்சரவரம்பு ரூ. 1.80 லட்சத்திலிருந்து ரூ. 2  லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் அவர் அறிவித்த அறிவிப்புகள் வருமாறு:

* நோய் தடுப்பு சோதனைக்காக காப்பீட்டில் ரூ. 5 ஆயிரம் வரை வருமான வரி கழிவுக்கு பயன்படுத்தலாம். 

* அரசு சேவைகள், பொது போக்குவரத்து சேவைகள் ஆகியவை சேவை வரியில் இருந்து விலக்கப்படுகிறது

* சேவை வரி விதிப்புக்கு பொதுவான வரி கட்டமைப்பு ஏற்படுத்தப்படும்

* சுங்கம் மற்றும் சேவை வரிக்கு ஒரு பக்க ரிட்டர்ன் தாக்கல் அறிமுகப்படுத்தப்படும்

* சேவை வரி உயர்த்தப்படுவதால் கூடுதலாக ரூ. 18,650 கோடி வருவாய் கிடைக்கும்

* விமான சேவைக்கும், சேவை வரி அதிகரிக்கப்படும். 

* சேவை வரி பொதுவாக 10 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயரும்

* சினிமா தொழிலில் சினிமாடோகிராபிக்குக்கான காப்புரிமைக்கு சேவை வரி நீக்கப்படும்

* உரத் தொழிற்சாலைகளுக்கான கருவிகள் இறக்குமதி, சுங்கவரியில் 5 சதவீதம் விலக்கு அளிக்கப்படும்

* பெரிய சொகுசு கார்கள் மீதான சுங்க வரி 22 சதவீதத்தில் இருந்து 24 சதவீதமாக உயர்த்தப்படுகிறது

* விமான உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு சுங்கவரி முற்றிலும் நீக்கப்படுகிறது

* சாலை அமைப்பு திட்டங்களுக்கான கருவிகள் இறக்குமதிக்கு சுங்க வரி முழுமையாக விலக்கப்படுகிறது

* டைடானியம் டை ஆக்சைடு மீதான சுங்கவரி 10 சதவீதத்தில் இருந்து ஏழரை சதவீதமாக குறைக்கப்படுகிறது

* ஏ.சி, பிரிட்ஜ் ஆகியவற்றுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும். இதனால் இவற்றின் விலை உயரும். 

* சைக்கிள்கள் தயாரிப்பு மீதான சுங்க வரி 10 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இதனால் சைக்கிள் விலை கடுமையாக உயரும்

* ஹெச்.ஐ.வி புற்றுநோய்களுக்கான மருந்துகள் மீதான வரி குறைக்கப்படுகிறது

* கையால் தயாரிக்கப்படும் தீப்பெட்டிகளுக்கு சுங்கவரி 10 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்படுகிறது

* சூரிய மின் விளக்குகள் மீதான வரி குறைக்கப்படுகிறது

* பள்ளிகள் வசூலிக்கும் கட்டணத்தில் சேவை வரி விலக்கு அளிக்கப்படுகிறது

* தங்கம் மீதான சுங்க வரி, 2 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயருகிறது

* அயோடின் உப்பு, சோயா மீதான வரி குறைக்கப்படுகிறது

* சிகரெட், வைரம் மீதான வரி அதிகரிக்கப்படுகிறது

* வாகன உதிரி பாகங்கள் இறக்குமதிக்கான சுங்க வரி 75 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக குறைக்கப்படுகிறது

* உள்ளூர் கச்சா எண்ணெய் மீதான வரி டன்னுக்கு ரூ. 2,500 ல் இருந்து ரூ. 4,500 ஆக உயர்த்தப்படுகிறது. 

* பிராண்டடு வெள்ளி நகைகளுக்கு மீதான சுங்க வரி முற்றிலுமாக நீக்கப்படுகிறது

* இந்திய வம்சாவழியினருக்கு பேக்கேஜ் படி ரூ. 25 ஆயிரத்தில் இருந்து ரூ. 35 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. இதே போல் குழந்தைகளுக்கான படி ரூ. 12 ஆயிரத்தில் இருந்து ரூ. 35 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது

* இயற்கை எரிவாயு, மின் உற்பத்திக்கான யுரேனியம் மீதான சுங்க வரி 2 ஆண்டுகளுக்கு முழுமையாக விலக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்