முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்வு

சனிக்கிழமை, 17 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,மார்ச்.17 - மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.3 லட்சம் வரை வருமான வரி விலக்கு உச்சவரம்பு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரூ.2 லட்சம் வரைதான் வருமான வரி விலக்கு உச்சரவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. 2012-13-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று பாராளுமன்ற லோக்சபையில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார். தற்போது ஆண்டு வருமான வரி உச்சவரம்பு ரூ.லட்சத்து 80 ஆயிரமாக இருப்பதை ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் இதர தனியார் நிறுவனங்களில் வேலைபார்ப்பவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ரூ.2 லட்சம் வரைதான் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. இது அரசு ஊழியர்களுக்கு பெருத்த ஏமாற்றமாகும்.ரூ.8 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு முன்பு 20 சதவீத வரி விதிக்கப்பட்டது. இது 10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. நேரடி வரிவிதிப்பு மீதான எனது திட்டங்களால் ரூ. 4 ஆயிரத்து 500 கோடி வரை நிகர வருவாய் இழப்பு ஏற்படலாம் என்று பட்ஜெட்டை தாக்கல் செய்து பிரணாப் முகர்ஜி கூறினார். வட்டி வருமானத்திற்கான வரியில் இருந்து ரூ. 10 ஆயிரம் வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தனி நபர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்தில் இருந்து 5 லட்சம் ரூபாய் உள்ளவர்கள் 10 சதவீத வரி கட்ட வேண்டும். 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் 20 சதவீதம் வரை வட்டி கட்ட வேண்டும். 10 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் 30 சதவீதம் வரை வரி கட்ட வேண்டும். நேரடி வரிவதிப்பு விதிமுறைகளை நிறைவேற்றும் வகையில் வரிவிலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு (80 மற்றும் அதற்கு மேலும் வயதுள்ளவர்) ஆண்டு வருமான வரி விலக்கு ரூ.5 லட்சமாக இருக்கும். 5 முதல் 10 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ள மூத்த குடிமக்களுக்கு 20 சதவீதமும் 10 லட்சத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு 30 சதவீத வரியும் விதிக்கப்படும். 60 முதல் 80 வயதுள்ள மூத்த குடிமக்களுக்கு ஆண்டு வருமான வரி விலக்கு 2.5 லட்சமாக இருக்கும். 2.5 லட்சம் ரூபாயில் இருந்து ரூ.5 லட்சம் வரை உள்ள மூத்த குடிமக்களுக்கு 10 சதவீதமும் ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 20 சதவீத வரியும் 10 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு ரூ.30 சதவீதமும் வரி கட்ட வேண்டும். வங்கியில் சேமிப்பு கணக்கு தள்ளுபடியானது சிறிதளவு வரி கட்டுபவர்களுக்கு உதவியாக இருக்கும். ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு இது அதிக அளவில் பயனுள்ளதாக இருக்கும் சேமிப்பு கணக்கு மூலம் ரூ.10 ஆயிரம் வரை உள்ள வட்டிக்கு வரிவிலக்கு அளிக்கப்படும் என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்