முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாத எதிர்ப்பு மையம் அமைப்பது சந்தேகமே...!

சனிக்கிழமை, 17 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மார்ச்.17 - தீவிரவாத எதிர்ப்பு மையம் அமைப்பது சந்தேகமே. தீவிரவாத எதிர்ப்பு மையம் எதுவும் அமைக்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை. தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையம் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் முயற்சிகளை மேற்கொண்டது. மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் மத்திய உள்துறை அமைச்சகம் இதுதொடர்பாக ஒரு சுற்றறிக்கையையும் வெளியிட்டது. இதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்பட 10-க்கும் மேற்பட்ட மாநில முதல்வர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்தநிலையில் மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையம் அமைப்பதற்கு நிதி எதுவும் ஒதுக்கீடு செய்யவில்லை. அதனால் தீவிரவாத எதிர்ப்பு மையம் அமைப்பது சந்தேகமே. 

பட்ஜெட்டில் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ரூ. 54 ஆயிரத்து 449 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்தாண்டைவிட 2 சதவீதம் குறைவாகும். அதேசமயத்தில் இந்த நிதியில் மத்திய ஆயுத போலீஸ் படைக்கு குடியிருப்புகள், குடியிருப்பு வளாகம் கட்டுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்