முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுலுக்கு சவாலாக மோடி இருப்பார்: கணிப்பில் தகவல்

திங்கட்கிழமை, 19 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

வாஷிங்டன், மார்ச். - 19 - வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசின் துருப்பு சீட்டாக விளங்கும் ராகுல் காந்திக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பெரும் போட்டியாக திகழ்வார் என்று டைம் இதழ் கருத்து வெளியிட்டுள்ளது. இந்த இதழில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ராகுல் காந்தி பிரச்சாரம் செய்த போதிலும் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற முடியவில்லை. 2014 ம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கு காங்கிரசின் சார்பில் ராகுலை முன்னிறுத்த தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால் முன்னோட்டமாக தற்போது நடந்த 5 மாநில தேர்தல்களில் ராகுலுக்கு சாதகமாக அமையவில்லை. இது ராகுலுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. மோடி என்றாலே வர்த்தகம். அப்படிப்பட்டவர் இந்தியாவுக்கு தலைமையேற்க முடியுமா. 61 வயதாகும் மோடியின் கடந்த கால அரசியல் பாதையை கவனத்தில் கொண்டால் ராகுலுக்கு மிக சிறந்த போட்டியாளராக மோடிதான் இருக்க முடியும். இந்த கட்டுரையை எழுதியுள்ள ஜோதிதோட்டம் என்பவர் மோடியை பேட்டி கண்டு அதையும் கட்டுரையில் எழுதியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் குஜராத் மாநிலத்தில் மேற்கொண்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களை டைம் பட்டியலிட்டு காட்டியுள்ளது. இந்தியாவில் முதன்மையான தொழில்துறை மாநிலமாக குஜராத் உருவாகி உள்ளது. குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை. ஆனால் இந்த சம்பவத்துக்கு காரணமாக உயரதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ இதுவரை குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெறவில்லை. மோடி மீது ஒரு வழக்கு மட்டும்தான் உள்ளது. அதிலும் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாவிட்டால் தேசிய அரசியலில் அவரது பிரவேசத்தை யாராலும் தடுக்க முடியாது என்று டைம் இதழ் குறிப்பிட்டுள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago