முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலோர கிராமவாசிகளுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு

திங்கட்கிழமை, 19 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, மார்ச். - 19 - அந்தமான் நிகோபார் நீங்கள் தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 13 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடலோர கிராமங்களில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு விரைவில் ஆதார எண்களுடன் கூடிய வசிப்பிட அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது. முதல் கட்டமாக 3,381 கிராமங்களில் வசிப்போருக்கு இந்த அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன.  அனைத்து மக்களுக்கும் ஒருங்கிணைந்த குறியீடு அடையாள எண் எனப்படும் ஆதார் எண்களை வழங்குவதற்காக கடந்த ஆண்டு முதல் பயோமெட்ரிக் டிஜிட்டல் முறைகளில் பொதுமக்களிடம் இருந்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. 2013 ஜூன் மாதத்துக்குள் இந்த பணிகள் முடிவடையும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இந்த பணிகளுடன் அனைத்து குடிமக்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணியையும் சேர்ந்து மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது பற்றி மத்திய உள்துறை அமைச்சக உயரதிகாரி ஒருவர் கூறியது, ஏற்கனவே சேகரிக்கப்பட்டு வரும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் உள்ள தகவல்களுடன் பொதுமக்கள் பற்றிய விபரங்கள் இணைக்கப்படும். அவை உள்ளூர் மக்கள் தொகை பதிவாளர் அலுவலகத்தில் வைக்கப்படும். அதில் இடம் பெற்றுள்ள விவரங்களில் குறைகளோ, திருத்தங்களோ இருந்தால் மாவட்ட கலெக்டர், மாவட்ட பதிவாளர், வட்டாட்சியர், பஞ்சாயத்து தலைவர்கள் ஆகியோரிடம் முறையிட்டு தீர்வு காணலாம். இந்த நடைமுறைகளுக்கு இடையே கடலோர கிராமங்களில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஸ்மார்ட் அடையாள அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட ஆதார் எண் பெற்ற அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago