முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாக். படைகள் அத்துமீறல்

திங்கட்கிழமை, 19 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர், மார்ச் 20 - காஷ்மீர் மாநில எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் படையினர் நேற்று போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கி சூடு நடத்தினர். காஷ்மீர் மாநிலத்தில் ரஜவ்ரி உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே நேற்று பாகிஸ்தான் படையினர் திடீர் என்று இந்திய ராணுவ நிலைகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதையடுத்து இந்திய ராணுவத்தினரும் பதிலுக்கு பாகிஸ்தான் நிலைகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதையடுத்து பாகிஸ்தான் ராணுவ உடையில் வந்த பாகிஸ்தான் படையினர் 8 அல்லது 9 பேர் அந்த பகுதியில் இருந்து தப்பி அவர்கள் எல்லைக்குள் ஓடி மறைந்துவிட்டனர். சிறு ரக துப்பாக்கிகள், எந்திர துப்பாக்கிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்த அத்துமீறல் நடவடிக்கையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஈடுபட்டதாக இந்திய ராணுவ அதிகாரிகள் கூறினர். பாகிஸ்தான் ராணுவத்தினரின் துப்பாக்கி சூட்டை அடுத்து இருதரப்பினருக்கும் இடையே நடந்த இந்த துப்பாக்கி சண்டை சுமார் ஒருமணி நேரம் நீடித்தது. இந்த துப்பாக்கி சண்டையில் இருதரப்பிலும் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் படைகள் நடத்திய இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அந்நாட்டு ராணுவ அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்படும் என்று இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்