முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த மாதம் பெட்ரோல் ரூ.5 - சிலிண்டர் ரூ.75-ம் அதிகரிப்பு

செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச். 20 - அடுத்த மாதம் முதல் தேதியில் இருந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5 ம், டீசல் விலை ரூ. 4 -ம், சமையல் எரி வாயு விலை ரூ. 75 -ம் உயர்கிறது. பெட்ரோல் விலையை பொறுத்தவரை பெட்ரோலிய நிறுவனங்களே அவற்றை நிர்ணயம் செய்து கொள்ளலாம் எனி னும், அரசை கலந்தாலோசித்தே இந்த முடிவுகளை எண்ணெய் நிறுவனங்கள் எடுக்கின்றன. சர்வதேச சந்தையில் காணப்படும் ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப, இந்தியாவிலும் பெட்ரோல் விலை அவ்வப்போது மா ற்றி அமைக்கப்படுகிறது. டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றி ன் விலையை அரசே நிர்ணயம் செய்கிறது. ஏனெனில் இவற்றுக்கு கணிசமான தொகையை அரசே மானியமாக வழங்கி வருகிறது. வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இது பல்வே று நாடுகளில் பொருளாதாரத்தில் தாக் கத்தை ஏற்படுத்தி வருகிறது.  

இதற்கிடையே இம்மாதம் 16 -ம் தேதி பாராளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக் கல் செய்த நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி மக்களை பாதிக்கும் பல்வேறு வரி உயர்வுகளை அறிவித்தார். பிரணாப் முகர்ஜி தனது பட்ஜெட் உரை யில் சாணக்கியரை மேற்கோள் காட்டி னார். ஆனால் நடைமுறையில் அவர் அதனை பின்பற்ற தவறிவிட்டார் என்ப து தான் அப்பட்டமான உண்மையா கும். 

மலர்களில் இருந்து மகரந்த துளிகளை தேனீக்கள் எவ்வாறு மெண்மையாக சேகரிக்கிறதோ அதைப் போல குடிமக் களிடம் மென்மையான முறையில் வரி யை வசூலிக்க வேண்டும் என்று அர்த்த சாஸ்திரத்தில் சாணக்கியர் குறிப்பிட்டு உள்ளார். 

ஆனால் மக்களை கசக்கி பிழியக் கூடிய வகையில், அரசுகள் வரிகளை விதிக்கி ன்றன, வசூலிக்கின்றன. பிரணாப் முக ர்ஜி பெரும்பாலான பொருட்களுக்கான உற்பத்தி வரியை 10 சதவீதத்திலிருந் து 12 சதவீதமாக உயர்த்தி உள்ளார். 

இதே போல சேவை வரியும், 10 சதவீத த்திலிருந்து 12 சதவீதத்திற்கு உயர்த்தப் பட்டு உள்ளதால் ஏராளமான பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை தாறு மாறாக உயரத்துவங்கி உள்ளது. 

ஏப்ரல் முதல்தேதியன்று துவங்கும் நிதி யாண்டில் இருந்து இந்த சுமைகளை மக்கள் சுமக்க நேரிடும். நாங்கள் கணிச மான தொகையை மானியமாக வழங் கி வருகிறோம். 

மானியங்களை வழங்க வேண்டுமென்றால் எங்களுக்கு கணிசமான பணம் தேவை. இதற்காகவே வரியை உயர்த்த வேண்டியுள்ளது என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளதை பொரு ளியல் வல்லுனர்கள் பலர் வன்மையாக சாடியுள்ளனர். 

ஒருவரின் உடலில் இருந்து ரத்தத்தை எடுத்து விட்டு அவருக்கு அதே ரத்தத் தை செலுத்துவதைப் போல மத்திய அரசு மோசமான முறையில் செயல்பட்டு வருகிறது என்று நிதியியல் வல்லுனர்கள் பலர் சாடியுள்ளனர். 

பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்பதை மத்திய அரசு உறுதி செய்து விட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 4 முதல் ரூ. 5 வரை உயரும். ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ. 3 முதல் ரூ. 4 வரை உயரும். ஒரு சிலிண்டர் சமையல் எரிவாயு விலை ரூ. 50 முதல் ரூ. 75 வரை அதிகரிக்கும். 

இதை பொருளாதார வட்டாரத் தகவல் உறுதிப்படுத்துகிறது. இந்த விலை உ ய ர்வு அடுத்த மாதம் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வரும். 

அரசின் இந்த முடிவை பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டித்துள்ளனர். இதற்கு, விலையை உயர்த்தாவிட்டால் பொருளாதார பேரிடரை சமாளிக்க முடி யாது என்று அரசு தரப்பு பதில் கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்