முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் மந்திரி பதவி கேட்டு எடியூரப்பா பிடிவாதம்

புதன்கிழமை, 21 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

பெங்களூர், மார்ச். - 21 - முன்னாள் கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா, தனது பிடியில் ஏராளமான எம்.எல்.ஏ.க்களை வைத்துக் கொண்டு தனக்கு முதல்வர் பதவி அளிக்க வேண்டும் என்று பிடிவாதமாக உள்ளார். இதனால் பா.ஜ.க மேலிட தலைவர்கள் பெரும் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். முன்னாள் முதல்வர் எடியூரப்பா சுரங்க ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பதவியில் இருந்து விலகினார். அவருக்கு பதில் சதானந்த கவுடா புதிய முதல்வரானார். கவுடாவின் தலைமையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த நிலையில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீண்டும் முதல்வர் பதவி கேட்டு போர்க்கொடி உயர்த்தி உள்ளார். கோர்ட் வழக்குகளில் இருந்து முழுமையாக விடுதலை பெற்றால் மீண்டும் முதல்வர் பதவி தருவதாக பா.ஜ.க .மேலிடம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் எடியூரப்பா மீண்டும் பிடிவாதமாக தனக்கு முதல்வர் பதவி தர வேண்டும் என்று மேலிட தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மொத்தமுள்ள 120 பா.ஜ.க. எம்.எல்.ஏக்களில் 55 பேரை எடியூரப்பா ஒரு ஓட்டலில் தங்க வைத்துள்ளார். பா.ஜ.க. மேலிடம் தனக்கு சாதகமான பதிலை 48 மணி நேரத்தில் தர வேண்டும் என்றும் எடியூரப்பா கெடு விதித்திருந்தார். அந்த கெடு நேற்றோடு முடிந்தது. எடியூரப்பாவை சமாதானப்படுத்த பா.ஜ.க. மேலிடம் செய்த முயற்சிகளுக்கு பலனில்லை. எனவே இதில் ஒரு முடிவெடுக்க வேண்டிய நெருக்கடியான கட்டாயத்திற்கு பா.ஜ.க. மேலிட தலைவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். எடியூரப்பா மீது அதிரடி நடவடிக்கை எடுக்க மேலிட தலைவர்கள் தயங்குகிறார்கள். அவர் மீது அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் கர்நாடகத்தில் பா.ஜ.க. ஆதரவு இழக்க நேரிடும் என்று அவர்கள் கருதுகிறார்கள். அதே சமயத்தில் சதானந்தா கவுடாவையும் உடனடியாக முதல்வர் பதவியில் இருந்து விலக்க மேலிட தலைவர்களுக்கு விருப்பமில்லை. இதனால் இருதலை கொள்ளி எரும்பு போல மேலிட தலைவர்கள் துடிக்கிறார்கள்.  இதனிடையே எடியூரப்பாவை டெல்லிக்கு வருமாறு பா.ஜ.க மூத்த தலைவர்கள் அழைத்திருந்தனர். ஆனால் இந்த அழைப்பை எடியூரப்பா ஏற்கவில்லை. முதல் மந்திரி பதவி ஒன்றே தனது நோக்கமாகவும், தேவைப்பட்டால் தனிக்கட்சி தொடங்கவும் எடியூரப்பா தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே எடியூரப்பா விவகாரம் இன்னும் சில தினங்களில் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago