முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜீப் மீது ரயில் மோதி விபத்து உ.பி.யில் 15 பேர் பரிதாப பலி

புதன்கிழமை, 21 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

ஹத்ராஸ். மார்ச்.- 21 - உத்தர பிரதேசத்தில் ஆளில்லாத லெவல் கிராசிங்கில்  ஒரு ஜீப் மீது   பயணிகள் ரயில்  மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் பரிதாபமாக பலியானார்கள். உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் மது ரயில் நிலையத்திற்கு அருகே ஒரு ஆளில்லாத லெவல் கிராசிங்கை   ஒரு ஜீப் கடக்க முயன்றது.  அப்போது அந்த வழியாக  மதுரா -  காஸ்கஞ்ச் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. ரயில் வருகிறது என்று தெரிந்தும் கூட  அதற்குள் கிராசிங்கை கடந்து விடலாம் என்று நினைத்த ஜீப்பின் டிரைவர் வேகமாக ஜீப்பை ஓட்டிச்சென்றார். ஆனால் அதற்குள் வேகமாக வந்த ரயில் அந்த ஜீப் மீது பயங்கரமாக மோதியது.  இதனால் அந்த ஜீப் தூக்கி எறியப்பட்டு நொறுங்கியது.ஜீப்பில் மொத்தம் 17  பேர் பயணம் செய்தனர். இவர்களில் 15 பேர் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்கள். மேலும் 2 பேர்  கடுமையான காயங்களுடன்  ஆபத்தான் நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் நேற்று காலை.7.19 மணிக்கு நடந்ததாக  மாவட்ட போலீஸ் அதிகாரி  சந்திர பிரகாஷ் தெரிவித்தார். இந்த விபத்து குறித்து  போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் என்ஜினுக்கு அவ்வளாக சேதம் ஏற்படவில்லை என்று தெரிகிறது. இந்த கோரச்சம்பவம் அந்த பகுதியில் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து குறித்து ரயில்வே உயர் அதிகாரிரகளுக்கு  தகவள் கொடுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் சம்பவ இடத்திற்கு  விரைந்துள்ளனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago