முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சங்கரன்கோயில் இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி

வியாழக்கிழமை, 22 மார்ச் 2012      அரசியல்
Image Unavailable

மதுரை, மார்ச். 22 - சங்கரன்கோயில் தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்வி 68,757 ஓட்டுகள் அதிகம் பெற்று மிகப் பெரும் வெற்றியடைந்தார். தி.மு.க, தே.மு.தி.க. உள்ளிட்ட 12 பேரும் டெபாசிட் இழந்தனர். முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிர் சவால் விட்டு களமிறங்கிய தே.மு.தி.க. நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டது. சங்கரன்கோயில் இடைத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் முத்துச் செல்வி, தி.மு.க. சார்பில் ஜவஹர் சூரியகுமார், ம.தி.மு.க சார்பில் சதன் திருமலைக்குமார், தே.மு.தி.க. சார்பில் முத்துக்குமார்,  மற்றும் பா.ஜ.க, சுயேட்சை உள்பட 13 பேர் களத்தில் இருந்தனர். வேட்பாளர் அறிவிப்பில் இருந்து அனைத்திலும் முந்திக் கொண்டது அ.தி.மு.க. இந்த தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றி துவக்கத்திலேயே முடிவு செய்யப்பட்டு விட்டது. அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்வியை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா சங்கரன்கோயிலில் 10 இடங்களில் பிரச்சாரம் செய்தார். தி.மு.க ஆட்சியில் இருப்பது போன்ற உணர்வில் கருணாநிதியின் மகன் அழகிரி, தி.மு.க.வின் தேர்தல் பொறுப்பாளராக களமிறங்கினார். துவக்கத்தில் 15 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவார் என அழகிரி முதலில் பேசினார். தேர்தல் களத்தில் அ.தி.மு.க.வுக்கு மக்களின் ஆதரவை கண்ட அழகிரி, சில நாட்களிலேயே 10 முதல் 15 ஆயிரம் ஓட்டுகளில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவார் என பேசினார். அதிலிருந்து அவரது தேர்தல் பணிகளும் அவ்வளவு சுறுசுறுப்பாக இல்லை. 

தொண்டர்களையும், நிர்வாகிகளையும் மிரட்டினாரே தவிர, பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிக்கவோ செல்லவில்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதி, அவரது மகன் ஸ்டாலின், தி.மு.க. முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் மந்திரிகள், எம்.பிக்கள் என ஒரு மாபெரும் படை தி.மு.க. சார்பில் தேர்தல் பணியாற்றியது. அவர்கள் சென்ற இடங்களில் எல்லாம் தி.மு.க. வெற்றி பெற்று விட்டது என்ற தொணியில் அதிகார தோரணையில் பேசி வந்தனர். நாட்கள் செல்லச் செல்ல அ.தி.மு.க.விற்கு ஆதரவு பெருகியது. மேலும் ம.தி.மு.க.வின் தேர்தல் பணிகளும் தீவிரமாக இருந்தது. இதைக் கண்ட தி.மு.க. எங்கே 3 வது இடத்திற்கு சென்று விடுவோமோ என்ற பயத்தில் தங்களது கட்சி ஓட்டுகளையாவது பெற வேண்டுமே என்ற எண்ணத்தில் தேர்தல் பணியாற்றினர். 

வைகோவின் சொந்த தொகுதியான சங்கரன்கோயிலில் எப்படியும் 2 வது இடத்தையாவது பிடித்து விட வேண்டும் என ம.தி.மு.க.வினர் கடுமையாக உழைத்தனர். இந்த தேர்தலில் வெற்றி பெற்று விட்டோம் என்ற பாணியில் விஜயகாந்தின் தேர்தல் பிரச்சாரமும் அமைந்தது. ஆனால் அ.தி.மு.க. வேட்பாளரோ எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி அமைதியாக வீடு வீடாக சென்று தனக்கு இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களிடம் வேண்டிக் கொண்டார். இந்த இடைத் தேர்தலில் சங்கரன்கோயில் தொகுதி மக்கள் அ.தி.மு.க.வுக்கு இந்த தொகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு மாபெரும் வெற்றியை கொடுத்துள்ளனர். சங்கரன்கோயில் தொகுதியை பொறுத்தவரை 2 லட்சத்து 5 ஆயிரத்து 840 வாக்காளர்களில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 045 பெண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 795 பெண் வாக்காளர்களில் மொத்தம் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 756 வாக்காளர்கள் கடந்த 18 ம் தேதி வாக்களித்திருந்தனர். இது 78 சதவீதமாகும். 

ஓட்டுப் பெட்டிகள் புளியங்குடி ராமசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியில் வைத்து மூன்றடுக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. 18 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. அனைத்து சுற்றுகளிலும் அ.தி.மு.க வேட்பாளர் மிகப் பெரிய ஓட்டு வித்தியாசத்தை கடந்தார். 

 

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்

 

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் மொத்தம் 13 பேர் போட்டியிட்டனர். நேற்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் இறுதிசுற்றில் அவர்கள் பெற்ற வாக்குகள் விபரம் வருமாறு:

 

1. எஸ்.முத்துசெல்வி அ.தி.மு.க.        94977

 

2. ஜவகர் சூரியகுமார் தி.மு.க.                           26220

 

3. சதன் திருமலைக்குமார் ம.தி.மு.க.         20678

 

4. முத்துகுமார் தே.மு.தி.க.                                 12144

 

5. முருகன் பா.ஜ.க.                                                        1633

 

6. நாகேஸ்வர் ராவ் சமாஜ்வாடி 277

 

7. கணேசன் ஜ.ம.க.                                                          355

 

8. அய்யனு சுயேட்சை 152

 

9. ஆறுமுகம் சுயேட்சை 220

 

10. உடையார் சுயேட்சை 300

 

11. சங்கர் சுயேட்சை 377

 

12. பெருமாள் சுயேட்சை 1324

 

13. வெள்ளத்துரை சுயேட்சை 1115

 

போட்டியிட்ட 13 பேரில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்துசெல்வி 68757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். மற்ற வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர்.  சங்கரன்கோயில் தொகுதி வாக்காளர்கள் மின்வெட்டுக்கான உண்மையான நிலையை உணர்ந்திருந்ததாலும், அ.தி.மு.க. அரசின் 9 மாத கால சாதனைகளை மனதில் கொண்டு வாக்களித்திருப்பது தெளிவாகி உள்ளது. எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரங்களை எல்லாம் தவிடுபொடியாக்கி அபார வெற்றி கண்டிருப்பதன் மூலம் சங்கரன்கோயில் தொகுதி என்றென்றும் அ.தி.மு.க.வின் கோட்டைதான் என இந்த இடைத் தேர்தல் மூலம் மீண்டும் நிரூபணமாகி உள்ளது. மகத்தான வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்விக்கு தேர்தல் அலுவலர் செல்வராஜ் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார். இதில் அமைச்சர் செந்தூர் பாண்டியன், கழக அமைப்பு செயலாளர் பி.எச். பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago